தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

0
5207

மும்பையில் பிடிபட்ட தஷ்வந்த், விமான நிலையத்தில் இருந்து தப்பியோடியுள்ளது சினிமாவை மிஞ்சிய சம்பவமாக அரங்கேறியுள்ளது.

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

தாயையும் கொன்றார்:

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்த தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின் பெற்றோரால் ஜாமீனில் வெளியே எடுக்கப்பட்டவர், கடந்த வாரம் வீட்டில் தன் தாயையும் கொன்றுவிட்டு நகை, பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்று மும்பையில் தலைமறைவானார்.

 

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

மும்பையில் கைது:

தஷ்வந்தின் செல்போன் ஜி.பி.எஸ்.-ஐ ட்ரேக் செய்து மும்பை வரை சென்று அவரை கைது செய்தனர் தமிழக போலீசார். பிறகு முறைப்படி நேற்று காலை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, ட்ரான்சிட் வாரண்ட் போட்டு சென்னைக்கு அழைத்து வர இருந்தனர் போலீசார். விமான நிலையத்திற்கு சற்று முன்னதாகவே தஷ்வந்த்தை அழைத்து வந்துள்ளனர்.

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

தப்பினார் தஷ்வந்த்:

கழிவறைக்கு செல்வதாக கூறி ஏமாற்றிவிட்டு, போலீசாரின் பிடியில் இருந்து கச்சிதமாக தப்பி ஓடினார் தஷ்வந்த். சென்னை போலீசாருடன், மும்பை போலீசும் இணைந்து மும்பை மாநகரை சல்லடை போட்டு தஷ்வந்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

SHARE