மும்பையில் தஷ்வந்த் தப்பியோடிய காட்சி [வீடியோ]

0
2858

தஷ்வந்தின் செல்போன் ஜி.பி.எஸ்.-ஐ ட்ரேக் செய்து மும்பை வரை சென்று அவரை கைது செய்தனர் தமிழக போலீசார். பிறகு முறைப்படி நேற்று காலை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, ட்ரான்சிட் வாரண்ட் போட்டு சென்னைக்கு அழைத்து வர இருந்தனர் போலீசார். விமான நிலையத்திற்கு சற்று முன்னதாகவே தஷ்வந்த்தை அழைத்து வந்துள்ளனர்.

கழிவறைக்கு செல்வதாக கூறி ஏமாற்றிவிட்டு, போலீசாரின் பிடியில் இருந்து கச்சிதமாக தப்பி ஓடினார் தஷ்வந்த். சென்னை போலீசாருடன், மும்பை போலீசும் இணைந்து மும்பை மாநகரை சல்லடை போட்டு தஷ்வந்தை தேடி இப்போது மீண்டும் கைது செய்துள்ளனர்.

தஷ்வந்த் விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய CCTV கேமிராக் காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.