நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் யாருக்கும் வேண்டுமானாலும் வரலாம்… ஜாக்கிரதை!

  0
  177

  என்ன தான் நாம் கேள்விப்படாத நோய்கள் நம் உடலில் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தினாலும். நோய்கள் தகுந்த சிகிச்சை முறையினால் அவற்றை குணப்படுத்திடலாம். நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் என்பது நம் எளிதில் கேள்விபடாத நோய்களில் இதும் ஒன்று.

  நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்

  நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்:

  நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் என்பது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பியிலும் நரம்பு மண்டலத்திலும் இருக்கும் செல்களில் உருவாகும் ஒரு வகைக் கட்டி. பினைன் வகையைச் சார்ந்த நியூரோஎண்டோக்ரின் ட்யூமர் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தாது. மாலிக்னன்ட் வகை நியூரோஎண்டோக்ரின் ட்யூமர் புற்றுநோயை உருவாக்கும் தன்மை உடையது.

  நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் எப்படி ஏற்படுகிறது..?

  அறிகுறிகள்:

  அதிக வியர்வை, படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். எந்த இடத்தில் கட்டி உருவாகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் தெரிய வரும். கணையத்தில் உருவானால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். வயிறு பகுதியல் உருவானால் மஞ்சள்காமாலை, அல்சர், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் உடல் எடை குறைந்துவிடும்.

  நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் எப்படி ஏற்படுகிறது..?

  சிகிச்சை முறை:

  பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வகையில் பரிசோதனைக்கு உரிப்படுத்துகின்றனர். உடல் திசு ஆய்வு மற்றும் நுண் திசு நோய்க்கூறு ஆகியவற்றில் அடிப்படியில் நோயின் தன்மையை பிரிக்கின்றர். முதல் இரண்டாம் வகையில் பயப்பட வேண்டியதில்லை. மூன்றாவது பிரிவில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மை அதிகம் உள்ளது. எனவே அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியினை அகற்றிவிட்டு அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும்.