புகைப் பிடிப்பதால பற்களில் கறை இருக்கா? இதை கொப்பளிச்சா 1 வாரத்துல கறை மறைஞ்சிடும்!!

  0
  11

  புகைப்பிடிப்பது உடலுக்கும், உயிருக்கும், பக்கத்தில் நிற்பவருக்கும் ஏன் நாட்டிற்கே கேடுதான். இருந்தாலும் யார் கேட்கிறார்கள். ஸ்டைலிற்காகவும், ரிலாக்ஸாக இருக்கவும்., மன அழுத்தத்திற்குமாக ஆரம்பித்து அதனை விடாமல் அடிமையாகிறரகள்.

  இதைப் பற்றி பேச்சு இந்த கட்டுரையில் வேண்டாம். புகைப்பிடிப்பதால் அழகும் கெடுகிறதென உங்களுக்கு தெரியாமலில்லை. சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், புகையிலை போன்றவை பற்களில் கறையை ஏற்படுத்தி முக அழகையும் கெடுக்கிறது.

  அப்படி உண்டான பற்களின் கறையை எப்படி போக்குவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம் .

  புகைப்பிடிப்பதால் பற்களின் ஈறுகள் பலவீனமடைந்து கிருமித் தொற்று உண்டாக்கி பற்களிய சேதப்படுத்தும் அதற்கும் இந்த குறிப்புகள் பயன்படும். கறையை நீக்கி, பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

  ஆயுர்வேத தைலம் :

  எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் அரிமேதஸ்தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை வாங்கிக் கொள்ளுங்கள். அதனை இரவு உணவிற்குப் பிறகு இரண்டு ஸ்பூன் அளவு வாயினுள் விட்டுக் கொண்டு நன்கு கொப்பளித்து துப்பி விடவேண்டும்.

  பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் கொப்பளித்து விடுங்கள். இப்படி செய்து வந்தால் கறை மட்டுமல்ல வீக்கம், பல் கூச்சம் போன்றவையும் நீங்கிவிடும். பற்களும் பலப்படுத்தும்.

  வெண்மை தரும் அற்புத மூலிகைப் பொடி :

  தேவையானவை ;

  சுக்கு, மிளகு, திப்பிலி, பட்டை, கிராம்பு, இந்துப்பு, வலமிளகு, ஏலரிசி – ஒவ்வொன்றும்- 20 கிராம்.

   

  செய்முறை :

  எட்டு மூலிகை மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, கிராம்பு, இந்துப்பு, வால் மிளகு ஆகியவற்றை சமமாக 20
  கிராம் அளவு எடுத்து பொடி செய்து சலித்துக் கொள்ளுங்கள். அந்த பொடியில் அதில் 120 மி.லி தேனும் 20 மி.லி. நல்லெண்ணெயும் விட்டுக் குழப்பி வைத்துக் கொள்ளவும்.

  துலக்கும் முறை :

  இதனை தினமும் காலையிலும் இரவில் பற்களால் துலக்க வேண்டும். எங்கு கறை அதிகம் இருக்கிறதோ அங்கு சற்று அழுத்தம்
  கொடுத்து தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் சில நாட்களிலேயே பற்களின் கறை மறைந்து வெண்மையாவதை காணலாம். அதோடு
  பற்களும் பலமாகும்.

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்