அசைவ உணவுசெரிப்பது இல்லையா? உணவு சீக்கிரம் செரிமானமாக வேண்டுமா? இதை படிங்க!

அஜீரண கோளாறு என்பது பொதுவாகவே பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு பார்க்காமல் வரக் கூடிய ஒன்றாகும். இந்த அஜீரண கோளாறானது பெரும்பாலும் அசைவ உணவுகளை சாப்பிடும் பொழுது அதிகமாக வரும். இன்னும் சிலருக்கு சில உணவுகளை சாப்பிடும் போது ஜீரணமாக சற்று தாமதமாகும்..

அஜீரண கோளாறின் காரணமாக வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். அதிலிருந்து தப்பிக்க இயற்கையாவே உள்ள இந்த சுவையான பொருட்களை சாப்பிட்டாலே போதுமானது. இந்த பகுதியில் செரிமானத்தை துரிதப்படும் சில இயற்கை பொருட்களை பற்றி காணலாம்.

பப்பாளி

பப்பாளியில் இயற்க்கையாவே விட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த பப்பாளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதன் மீது சிறிதளவு எழுமிச்சை சாறை பிளிந்து அல்லது ப்ரூட் சாலட்டுகளில் சேர்த்தோ சாப்பிடலாம்.

யோகார்ட்

யோகார்ட் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது. நீங்கள் பால் பொருட்களை உணவில் சேர்த்து வருவதன் மூலமாகவும் உங்களது செரிமானத்தை மேம்படுத்தலாம். யோகர்ட்டில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் கரையாமல் உள்ள கொழுப்புகள் மற்றும் புரோட்டினை கரைத்து செரிமானத்தை எளிமையாக்க உதவுகின்றன.

வெந்நீர்

எப்பொழுதும் சாப்பிட்ட உடன் குழுமையான நீரை பருக கூடாது. இது செரிமானத்தை தாமதப்படுத்தும். ஆனால் வெந்நீர் பருகினால் உங்களது செரிமானமானது விரைவுப்படுத்தப்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ உடல் பருமனை குறைக்க உதவுகிறது என்பது நமது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து 1 கப் டீயை அருந்துவது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். காலை மற்றும் மாலை என தினமும் 2 கப் க்ரீன் டீ அருந்துவது சிறப்பு.

வெந்தயம்

வெந்தயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வெந்தயமானது நாம் சாப்பிடும் அசைவ உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவியாக உள்ளது. வெந்தயத்தை இரவு உறங்க செல்வதற்கு முன்னர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகுவது சிறப்பு.

சீரகம்

சீரகத்தில் இரும்பு சத்து, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சீரகம், அசைவ உணவுகளில் மனத்திற்காகவும், சுவையை கூட்டுவதற்காகவும் சேர்க்கப்படுகிறது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரினை வெதுவெதுப்பாக அருந்துவதன் மூலமாக அஜீரண கோளாறுகளில் இருந்து எளிதில் தப்பிக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் உணவுக்குழாயில் அமிலம் அதிகமாக படிவதை தடுக்கிறது. உணவுக்குழாயில் அதிகமாக அமிலம் படிந்தால் அது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

மஞ்சள்

மஞ்சளை நாம் பழங்காலமாக நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க பயன்படுத்தி வருகிறோம். அசைவ உணவுகளில் மஞ்சள் ஒரு கிருமிநாசினியாக பயன்படுகிறது. மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வருவதால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் கலந்த பாலை பருகுவதாலும் செரிமான பிரச்சனைகள் குறையும் வாய்ப்புகள் உள்ளது.

கீரைகள்

கீரைகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். கீரைகளில் அதிகளவு விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே ஆகியவை உள்ளது. இவற்றில் உள்ள இனுலின் என்ற நார்ச்சத்து, ப்ரோபயோடிக் என்ற செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

தானியங்கள்

தானியங்கள் நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், நமது செரிமான அமைப்பு பிரச்சனையின்றி செயல்படவும் அதிக அளவில் துணை புரிகிறது. கோதுமை, கம்பு, சோளம் போன்ற முழு தானிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

SHARE