மீண்டும் முகநூலில் பதிவிட்ட ஹச்.ராஜா..!

0
7002

திரிபுராவில் இந்நிலையில் கடந்த வாரம் நடைப்பெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிப்பெற்றது. அதனால் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனையடுத்து பாஜகவின் தேசிய செயளாலர் ஹச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் லெனின் சிலை அகற்றபட்டது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பதிவிட்டார்.

இதனால் தமிழகம் முழுவதும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் மற்றம் நடிகர்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். உடனே அந்த பதிவை நீக்கிவிட்டார். அவருக்கு எதிராக எதிர்ப்புகள் வந்தால் மீண்டும் ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்துகள் தான் பதிவிட்டதில்லை என்றும் தனது அனுமதியின்றி அட்மின் பதிவு செய்துவிட்டார். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.

இந்நிலையில் எச் ராஜாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறிய நிலையில் இன்று டுவிட்டரில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் போன்ற தலைவர்களை அவமதிக்கும் விதமாகவோ அவமதிப்பதை ஊக்குவிக்கும் விதமாகவோ மரியாதை குறைவாகவோ சொல்லப்படும் கருத்துகளை பாஜக ஆதரிக்காது என்று தெரிவித்தார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்