வறட்டு இருமலை நிமிடத்தில் குணப்படுத்தும் ஒரு பாட்டி வைத்தியம்!!

0
10

இருமல் உங்கள் நுரையீரலில் நுழைந்த ஏதாவது ஒரு அன்னியப் பொருள் அல்லது கிருமிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருமலை உண்டாக்குகிறது உங்கள் உடல்.

அது கிருமிகளாலும் இருக்கலாம், தூசு, மாசு நிறைந்த காற்றாகவும் இருக்கலாம்.
சிலருக்கு வறட்டு இருமல் உண்டாகும் கிருமிகளின் தாக்கம் இல்லாமல், நல்ல வெயில் காலத்திலும் தொடர்ந்து வறட்டு இருமல் உண்டாகும்.

அலர்ஜியின் விளைவால் வறட்டு இருமல் உண்டாகும். இதனை எப்படி போக்குவது என சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதற்குத்தான் இந்த பாட்டி வைத்தியம்.

தேவையானவை :

மிளகுப் பொடி
நெய்
வெல்லம்

தயாரிக்கும் முறை :

மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு துண்டு வெல்லத்தையும், இந்த மிளகுப் பொடியையும் போட்டு சூடு பண்ணவும். திரண்டு வரும்போது இறக்கி சிறு, சிறு உருண்டைகளாகப் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

ஒரு உருண்டையை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டால், அந்தக்காரம், தித்திப்பு இரண்டும் சேர்த்து, தொண்டையில் இறங்க இறங்க, தொண்டைக்கு இதமாக இருக்கும். வரட்டு இருமல் வேகமாக குறையும்.

SHARE