அன்றைய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்த கவுண்டமணி வசனங்கள்!

0
44383

நகைச்சுவை மன்னன் கவுண்டமணி தனது வசனங்களில் அரசியலை போட்டு ‘வெட்டு வெட்டுன்னு வெட்டுவார்’. கொஞ்சமும் பயமில்லாமல் ஏகத்துக்கும் நக்கல் அடிப்பார். எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், தொழில் அதிபராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் பங்கம் பண்ணிடுவார். அப்படி அவர் பேசிய சில வசனங்கள் நமது அரசியல்வாதிகளை அலறவிட்டவை. அதை இங்கே பார்ப்போம்.

சூரியன் படத்தில் இவர் பேசிய ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் இன்னும் நூற்றாண்டு கால அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

‘துண்டு போட்டவனை எல்லாம் புடிச்சிங்கன்னா குண்டு போட்டவனையும் புடிச்சிடலாம்’. வசனம் அன்றைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அடிவயிற்றில் புளியை கரைத்தது என்று சொன்னால் மிகையாகாது.

‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..’ என்ற வசனமும், அப்போது செந்தில் பேசும் ‘இதுல எப்புடி ன்னே பளிச்சினு எரியும்’ என்ற ஏக வசனமும் செம அப்ளஸ் வாங்கிய வசனங்கள்.