விட்ட குறை, தொட்டகுறை தந்த வினை- ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு!

0
17

ஸ்டெர்லைட் ஆலை நிரத்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் நடத்திய போரடடம் வீணாகாமல் அதன் பலன் கிடைத்தது.

அதிலிருந்து வெளிவரும் மிக ஆபத்தை தரும் கழிவுகள்தான் காரணம். இந்த மோசமான கழிவுகளால் புற்று நோய், உள்ளுறுப்புகள் பாதிப்பு,மரபணு பாதிப்பு என பல வித பிரச்சனைகள் தலையெடுத்ததால் மக்களே முன்னெடுத்து செய்ட போராட்டம் இறுதியில் வென்றது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவினால்
அங்கு பணிக்கு இருந்த காவலர் மயங்கி விழுந்துள்ளார்.பழைய குழாயில் இருந்து
ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்ப்டையில் விசாரித்த ஆய்வு குழு அங்கு பழைய கந்தக அமிலக் குழாயிலிருந்து அமிலக்கசிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மேலும் இந்த கசிவை சரி செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். மீண்டும் கசிவு ஏற்படாத வண்ணம் சரிசெய்யப்பட்டு வந்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

நேற்று காலையில் இருந்து தீயணைப்பு படையினர், அதிகாரிகள் கழிவு நீக்கி
வருகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையாக நீக்க முடியாமல் கஷ்டப்பட்டு
வருகிறார்கள். கழிவுகளை அப்புறப்படுத்த டேங்கர் லாரிகளை பயன்படுத்து வருகிறார்கள்.

இரண்டாவது நாளாக இன்றும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கழிவுகளை அகற்ற ஸ்ட்ரெட்லைட் பணியாள்ர்களையே பணியமர்த்த வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE