8 வாரங்களில் உங்க வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் மேஜிக் உணவுகள்!!

0
12256

சீட்டை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு வேலைப் பளு. மாலை வந்தால் களைப்பு. இதில் எங்கே உடலைப் பற்றி நினைக்க முடியும். நாட்கள் செல்ல செல்ல மெல்ல கொழுப்பு ஏறி, தொப்பையும், தொந்தியுமா ஆனபோதுதான் அடடா நாம குண்டாயிட்டமோ என நினைக்கிறோம்.
உடனே ஞானோதயம் வந்து வேர்க்க வியர்க்க உடற்ப்யிற்சி, நடைபயிற்சி செய்கிறோமா என்ன? சான்ஸே இல்ல. அப்படியே கவலைப்பட்டுகிட்டே அதே வாழ்க்கை முறையை பயன்படுத்திக்கிறோம்.
உணவுகளிலும் மாற்றங்கள் கொண்டு வராமல், உடற்பயிற்சிக்கும் இடம் தராமல் நாளடைவில் உடல் பருமன் பலவியாதிகளை
தருவதுதான் மிச்சம்.

ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உடல் பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் சிறிது மாற்றம் கண்டு வந்தால் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க 100 சதவீதம் முடியும்.

நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் கொழுப்பை எரிக்க உதவுகின்றன. இதனால் தேவையற்ற கொழுப்பு உடலில் சேமிக்காமல் எரிக்க உதவுகிறது. உங்கள் ரத்தத்தையும் சுத்தப்படுத்துவதால் உடலில் தங்கும் நச்சுக்கள் வெளியேற்றி உடலை பொலிவாக்கும். அப்படிப்பட்ட உணவுகள் எவை என பார்க்கலாமா?
இந்த கீழே சொல்லப்பட்டுள்ள உணவுகளை 7 நாட்களை கணக்கில் கொண்டு தினமும் ஒன்றை திட்டமிட்டு சாப்பிட்டு வாருங்கள். உடல் எடை குறைவதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.

காலை உணவு- முட்டை :

நீங்க காலை உணவாக வெறும் 2 அல்லது 3 முட்டைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் எடையை கணிசமாக 8 வாரங்களில் குறைக்கலாம் என்பது தெரியுமா? தினந்தோறும் தவறாமல் சாப்பிட்டுப் பாருங்கள். முட்டையில் உயர் ரக புரதம் , ஆரோக்கியமான கொழுப்பு, மிகவும் குறைவான கலோரி உள்ளது. நாட்டுக் கோழி முட்டையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். ப்ராய்லர் முட்டை உடலுக்கு கேடு தரும்.

மீன் ;

தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையே கூடாது கவனித்துப் பாருங்கள். அதிலுள்ள அமினோ அமிலங்கள் உடல் கொழுப்பை கரைக்கின்றது. தினமும் 100 கலோரி எரிக்க மீன் உதவுகின்றது. அதிகப் பசியை தடுக்கின்றது. இதனால் விரைவில் உடல் கொழுப்பை கரைக்கலாம்.

சிக்கன் நெஞ்சு :

அசைவ உணவை கைவிட முடியாதவர்கள் சிக்கனின் நெஞ்சுப் பகுதியை அதிகம் சாப்பிடுங்கள். அதில் அதிக புரதம் இருப்பதால், உடலில் தங்கும் கொழுப்பை கரைக்கின்றது. ப்ராசஸ் செய்யப்படும் சிக்கனை தவிர்க்கவும். நாட்டுக் கோழியின் நெஞ்சுப் பகுதியை சாப்பிடுவதால் உடல் கொழுப்பை எரிக்கலாம். பொதுவாக சிக்கன் சபபிடுவதல உடல் எடை கூடும் என்று சொல்வரகள். அது தவறு. அதிக புரதம் கொண்டுள்ள ப்ராசஸ் செய்யப்படாத சிக்கனை சாப்பிடலாம்.

பீன்ஸ் வகைகள் :

பீன்ஸ் அதிக புரதம் கொண்டவை. அவற்றை சுண்டலாக அல்லது ஊற வைத்து ஏதாவது ஒரு உணவுவகையாக சாப்பிடலாம். குறிப்பாக கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வார இருமுறையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

கொள்ளு :

கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது மிகையில்லாத பழமொழி. ஊற வைத்த கொள்ளை தினமும் துவையலாகவும் ரசமாகவும் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினமும் துவையல் சாப்பிட முடியாவிட்டாலும், கட்டாயம் கொள்ளு ரசமாவது செய்து சாப்பிடுங்கள். அடிவயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்கும்.

SHARE