படுத்ததும் தூக்கம் வரனுமா? இதை தலையணை பக்கத்துல வைங்க!!

0
21

தூக்கம் எல்லாருக்கும் பிரச்சனை. உலகளவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் ஏராளம். அதனை அப்படியே விட்டுவிட்டால் நிரந்தரமாக வரும் தூக்கமின்மை நோயான இன்சோம்னியாவினால் பாதிக்கப்படலாம்.

தூக்கம்தான் உங்கள் உள்ளுறுப்புகளுக்கு பரிபூரண ஓய்வு மற்றும் நச்சுக்களிய வெளியேற்றும் நேரமாகவும் இருக்கும். அதனால் அந்த தூக்கத்தை தொலைத்தீர்களென்றால், ஒட்டமொத்த உடல் இயக்கத்தையும் மாற்றுகிறீர்களென்று அர்த்தம்.

உங்களுக்கு படுத்ததும் தூக்கம் வர உதவும் சில குறிப்புகளிய சவுத் நியூஸில் பகிர்ந்துள்ளோம். அவற்றை உபயோகப்படுத்தி பயனடயுங்கள்.

மகிழப் பூக்கள் :

பட்டை, இலை, பூ என மொத்த மரமும் மருத்துவ குணம் வாய்ந்தது மகிழ மரம். பல நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டாலும், தூக்கத்திற்கு மகிழம்பூக்கள் சிறப்பினை தருவதாகும்.

மகிழம்பூக்களை சேகரித்து, நன்கு சுத்தம் செய்து படுக்கையில் தலையணைக்கு அருகில் வைத்துப் படுக்க, மனதில் நல்ல எண்ண அலைகளை உண்டாக்கி, அடுத்த நோடி தூக்கம் உங்கள் கண்களை தட்டும்.

இது தவிர்த்து தூக்கம் வரவழைக்க சாப்பிடும் மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகளைப் பார்க்கலாம்.

பாலில் தேன் ;

தூக்கத்தை வரவழைப்பது மெலடோனின் என்ற ஹார்மோன் தான் காரணம். இந்த ஹார்மோனை தூண்டிவிடுவது ட்ரிப்டோஃபன் என்ற அமினோ அமிலம். இது அதிகமுள்ள உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது நல்ல தூக்கம் நிச்சயம்.

ட்ரிப்டோஃபன் அதிகம் இருக்கும் உணவுப் பொருள் பால். அதுவும் கொழுப்பில்லாத பசும்பாலில் அதிகம் இருக்கின்றது. தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் சூடான
பாலில் அரை டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் ஆனந்தமான உறக்கம் வரும்.

தேங்காய் பால் மற்றும் ஆப்பம் :

கார்போஹைட்ரேட் உணவுகள் செரடோனின் உற்பத்தியை தடுத்து மெலடோனின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். அப்படி தேங்காய் பல மற்றும், ஆப்பம் மிகச் சரியா காம்பினேஷன். செய்வதும் எளிது. சாப்பிட்டு படுத்தால் தூக்க்ம நிச்சயம்.

புரத உணவுகள் :

வாழைப்பழம் கேழ்வரகு, கம்பு, பாதாம், தர்பூசணி விதை, வெள்ளரி விதை, கசகசா, எள், வேர்க்கடலை, போன்றவற்றையும் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

சாப்பிடக் கூடாத உணவுகள் :

தக்காளி

இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். அமிலத்தன்மையை அதிகம் சுரப்பதல நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவற்றை உண்டாக்கி, தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும். எனவே, இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

துரித உணவுகள் :

துரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்