‘கொடி நாள்’ நன்கொடை பணம் எங்கே செல்கின்றது தெரியுமா?

0
273

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படையான கடற்படை, விமானப்படை, தரைப்படை வீரர்களின் அரும்பெரும் பணிகளையும், அவர்கள் நம் நாட்டிற்காக ஆற்றிய தியாகங்களையும் போற்றும் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம் தேதியன்று கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது.

தியாக உணர்வுடன் தேசத்தை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களை காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றிடும் விதமாக, இந்நாளில் நன்கொடைகள் வாங்கப்படும்.

குறிப்பாக கொடி விற்பனையின் மூலம் நாட்டு மக்களிடம் இருந்தும், அலுவலகங்களில் இருத்தும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மணிகளிடம் இருந்து இருந்து நன்கொடை வசூலிக்கப்படும். இதில் கிடைக்கும் நிதியானது படைவீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கும், போர்களில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் அனுப்பப்படுகிறது.

நம்மையும் நமது தேசத்தையும் காக்க தன்னுணர்வுகளை தியாகம் செய்த நமது வீரர்களுக்கு நம்மால் இயன்ற அளவுக்கு நிதிகளை அளித்து அவர்களின் குடும்பங்களை காத்திடுவோம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்