பிப்ரவரி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்ப இதை படிங்க…!

0
2894

பிப்ரவரி மாதம் எப்போதுமே சற்று வேறுபட்ட மாதம் ஆகும். அதன் நாட்கணக்கும் குறைவு. காதலர் தினம் வரும் மாதம் என்பதால் ஒரே அஜால் குஜாலாக கொண்டாடப்படும் மாதமும் இதுவே. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர்கள், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

#1 லவ்வோ லவ்வு:
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ரோமேண்டிக் மூட் கொண்டவர்கள். அழகியலை ரசிக்கக் கூடியவர்கள். இவர்களை சுற்றி எப்போதுமே ஐந்தாறு குப்பிடுகள் அம்புடன் சுற்றிக்கொண்டே இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காதலிலும் காமத்திலும் திளைத்து வாழ விரும்பிடுவார்கள்.

#2 காசு பணம் துட்டு மணி மணி…
என்று பணத்தின் பின்னாலேயே ஓடமாட்டார்கள் என்றாலும் சேமிப்பில் கருங்கல்லைப் போல நிலையாக நிற்பார்கள். சரியான கஞ்சப்பிசுனாரிகள் என்றாலும் கூட மிகையாகாது. பத்து ரூபாய் செலவு செய்தால் இருபது ரூபாய்க்கு லாபம் பார்ப்பார்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்