ஸ்டெர்லைட் ஆலைப் பற்றிய தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்-ஒரு மின்னல் வேக குறிப்புகள்!!

0
13

ஸ்டெர்லைட் பற்றி இன்று எல்லா மூலைமுடுக்கிலும் தெரிந்ததற்கு முக்கிய காரணம் தொடர் போராட்டங்கள்தான்.

என்னன்னவோ செய்தும் அந்த நிறுவனமும், அவர்களுக்கு அடங்கும் நீதியமைப்பும்தான் மற்ற மக்களையும், என்னவென்று எட்டிப் பார்க்கச் செய்தது. மெல்ல தூத்துக்குடியின் அவலம் வெளிச்சத்திற்கு வந்தது.

சில வருடங்களுக்கு முன் ஸ்டெர்லைட் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. எது உயிரை கொத்து கொத்தாக பறிக்க நினைத்ததோ, எது இயற்கையின் வளங்களை பாழ்படுத்த நினைத்ததோ அதனை மக்கள் கண்டுணர்ந்து தடுக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்த போராட்டம் இருக்கிறது எனலாம். அதற்கு முன் அதனைப் பற்றிய பிண்ணனியை இந்த கட்டுரையில் காணலாம்.

ஸ்டெர்லைட்டின் உரிமையாளர் – அனில் அகர்வால்.

பாட்னாவில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், 1972 ஆம் ஆண்டு
தந்தையுடன் அலுமினிய தொழிலில் ஈடுப்பட்டார். பின் மும்பைக்கு சென்றவர், வேதாந்தா நிறுவனத்தை தொடங்கினார். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது.

தலைமையிடம் : இந்த நிறுவனத்தின் தலையிடம் லண்டன் மற்றும் இங்கிலாந்து.

முக்கிய உற்பத்தியும் கழிவும் ;

இந்த ஆலையின் முக்கிய உற்பத்தி காப்பர் தான். ஆனால் அதனை உற்பத்தி செய்யும் போது வெளியேறும் கழிவுகள் மிகவும்
அபாயகரமானது. அவை தங்கம், சல்ஃப்யூரிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலம். இந்த இரு அமிலங்களும் மிகவும் அடர்த்தி
வாய்ந்தவை நரம்பு மண்டலத்தை சேதாரப்படுத்துபவை.

தொடங்கப்பட்டு பின் மறுத்த மாநிலங்கள் :

முதலில் தேர்வு செய்த இடம் குஜராத். பின்னர் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மகராஷ்ட்ரா, கோவா, கர்னாடகா, கேரளா, போன்ற இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

 

அனுமதி அளித்த மாநிலம் :

வேறு எதுவாக இருக்க முடியும். நம் தமிழ் நாடுதான். 1994 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

போராட்டம் ;

ஆரம்பித்த உடனேயே மக்களும் சில அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் இரு வருடங்கள் தொழிற்சாலையை தொடங்க முடியாமல் நிறுவனம் இருந்தது.

ஆலை இயங்க அனுமதி அளித்தவர் :

அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி 1996-97 ஆம் ஆணு ஆலையை இயங்க அனுமதி அளித்தார். பல்வேறு போராட்டங்களிடையே இந்த தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

தொடர் விபத்துகள் :

ஆலை இயங்க ஆரம்பித்த பின் சிலிண்டர் வெடிப்பு, சல்ஃப்யூரிக் அமிலக் குழாய் வெடிப்பு செப்புக்கலவை வெடிப்பு, எண்ணெய் டேங்க் என தொடர்ந்து பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தது.

ஆலையை மூட உத்தரவு ;

பின்னர் மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை அடைப்பு என பாதிப்புகள் உண்டானதும் சமூக ஆர்வலர்கள் பதித்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலவ ஜெ.ஜெயலலிதா ஆலையை மூட உத்தரவிட்டார்.

மீண்டும் திறப்பு :

ஆனால் இதனை எதிர்த்து நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில், உச்சநீதி மன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ரூ.100 கோடியை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2013 ஏப்ரல் மாதத்தில் அனுமதி அளித்தது.

தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ;

மீண்டும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது .

இப்படி இருபது வருடங்களாக மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஆலையினால் உண்டாகும் பாதிப்புகளாம் எழுந்த மக்கள் போராட்டமும்,பிடிவாதமாக இருக்கும் நிறுவனமும், அதற்கு ஆதரவாக இருக்கும் உச்ச நீதி மன்ரமும் ஒரு நெடுன் தொடர்கதையாகவே மாறிவிட்டது.

மக்களால் மக்களுக்காக இயக்கப்படுமா ஒரு அரசு என்பது?

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்