பைல்ஸ் தீராத பிரச்சனையா இருக்கா? இந்த ஒரு பொருள் எப்படி தீர்வு தரும்னு பார்க்கலாமா?

0
6

மூலம் சாதரண பிரச்சனை அல்ல. சிறுவயதிலிருந்தே கவனிக்கப்படாத மலச்சிக்கலினால் உருவாவதுதான் மூலம். சிலருக்கு மரபணு காரணமாகவும் மூலம் உருவாகலாம்.

ஒவ்வொரு முறையும் காலைகடன் கழிப்பது பெருந்திட்டாட்டமாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். கழிவுகளை வெளியேற்றாமல் அவஸ்தைப்படுவது எவ்வளவு வேதனை தரும்.

சரியான உடற்பயிற்சி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், நிறைய நீர் குடித்தால் போதும். மூலத்தை வராமல் பாதுகாக்கலாம். நாள் முழுவதும் அமர்ந்து எந்த உடல் உழைப்பும் இல்லாதவர்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.சரி. வந்தாயிற்று என்ன செய்யலாம். நிம்மதியாக போக முடியவில்லையே என்று கவலைப்படுவர்களுக்காக தரும் தற்காலிக தீர்வுதான் இது.

எப்படி செய்வது?

வாசலின் அல்லது ஏதாவது ஒரு பெட்ரோலியம் ஜெல்லி மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் மூலம் உள்ள பகுதிகளில், உங்களுடைய ஆட்காட்டி விரலால் வாசலினை சிறிது தடவ வேண்டும்.உள் மூலமிருந்தால் கவனமாக உட்பகுதிகளிலும் தடவுங்கள். மெதுவாக மசாஜ் செய்வது முக்கியம்.

லன் :

வாசலின் வீக்கத்தையும், புண்ணையும் ஆற்றும் குணம் பெற்றது. இது மூலத்தைச் சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும். வலி குறையும்.

தினமும் செய்யும் போது மெல்ல மெல்ல மூலம் குணம் பெறுவதை காண முடியும். உங்களுக்கு ரத்தக் கசிவுடன் கூடிய மூலமாக இருந்தால் வாசலின் கொண்டு குணப்படுத்த முடியாது. மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம் :

இதனோடு நல்ல உணவும் பழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். நீர் மற்றவர்களை விட
அதிகமாகவே அருந்துங்கள். நன்றாக தூங்குவது முக்கியம்.

பிரட், பிஸ்கட், மைதா உணவுகள் போன்ற மலச்சிக்கலை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்