ஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்!

0
202862

எட்வர்ட் ஸ்னோடென் என்ற நபர் சில வருடங்களுக்கு முன்பு பல முக்கிய தலைவர்களையே விக்கி லீக்ஸ் என்ற இணையதளம் மூலம் மிரள வைத்தவர்.

தற்போது இவர் தலைவறைவாக வாழ்ந்து கொண்டுயிருக்கிறார். இந்த நிலையில் இவர் ஆதார் அமைப்பை கைது செய்ய வேண்டும். ஆதார் அமைப்பே ஒரு மோசடி என்றும் அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பஞ்சப்பில் உள்ள சிலர் வாட்ஸ் ஆப் மூலம் யாருடைய விபரத்தை கொடுத்துள்ளது. அதற்காக அவர்களின் பேடிஎம் கணக்கிற்கு ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும். கூடுதலாக ரூ.300 செலுத்தினால் உங்களுக்கென தனியாக ஐடி-யும் பாஸ்வோர்ட் கொடுக்கப்படும்.அதன் மூலம் யாருடைய ஆதார் தகவல் வேண்ணடுமாலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று செயல்பட்டு வந்தது.

இதனை ‘தி டிரிபியூன்’ என்று ஆங்கில பத்திரிக்கை ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் கண்டுபிடித்தது. இந்த பத்திரிக்கையை சேர்ந்த ராச்னா கைரா என்பவர் ஸ்டிங் ஆப்ரேஷனை செய்தார். இந்த நிலையில் ராச்னா கைரா மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது. வெவ்வேறு பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த வாட்ஸ் ஆப் குழுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது எட்வர்ட் ஸ்னோடென் டிவிட் செய்துள்ளார். அதில் ”ஆதார் கார்ட் மோசடியை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவருக்கு விருது கொடுக்க வேண்டும். அரசு உண்மையில் நீதியை நிலைநாட்ட விரும்பினால் இதற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு காரணமான நபர்கள் வேறு யாரும் இல்லை. ஆதார் அமைப்புதான்” என்று வெளிப்படையாக குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன்பே இவர் ஆதார் குறித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். மக்களுக்கு தெரிந்தே அவர்களின் தகவல்களை அரசு திருடுவதற்கு பெயர்தான் ஆதார் என்று தெரிவித்தார். இது எப்போதும் மக்களின் நலனுக்கானது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்