முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் கேட்டா வாயை பிளப்பீங்க!!

0
29

தன்னுடைய தேவையைத் தாண்டி சம்பாதிப்பது இல்லாதவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பது கம்யூனிச கோட்பாடுகளில் ஒன்று. ஆனால் கம்யூனிசத்தில் இருப்பவர்களே அதனை கடைப்பிடிப்பதில்லை.

நமது இந்தியா ஒரு விந்தையான நாடுதான். உலகத்திலேயே மிகவும் காஸ்ட்லியான
வீடு பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பின் நம் இந்தியக் குடிமகனான முகேஷ்
அம்பானியின் வீடுதான் என்றால் ஆச்சரியப்படுவதா? இல்லை உலகிலேயே தங்க
வீடில்லாமல் மக்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவமானப்படுவதா
என்றுதான் புரியவில்லை.

அம்பானியின் வீடு :

ஆமாம் அத்தனை பெரிய வீடு முகேஷ் அம்பானியின் வீடு. தென் மும்பை பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று.

மொத்தம் 27 அடுக்குகள் கொண்ட முகேஷ் அம்பானியின் அன்டிலியா கட்டிடத்தில் சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே மட்டும் கட்டபட்டுள்ளது.

ஆதுமட்டுமில்லாமல் நில நடுக்கம் வந்தாலும் தரமாக இருக்கும்படி நிறைய நுட்பங்களை வைத்து கட்டப்பட்டது.

அப்படிப்பட்ட மிகப்பெரிய ஆடம்பர வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வீட்டில் பணிபுரிபவர்களுக்கு :

முகேஷ் அம்பனையின் வீட்டில் சுமார் 600 கும் மேற்பட்டவர்கள் பணிபுர்கிறார்கள்.
ஆரம்ப நிலையில் 6000 சம்பளம் பெறுபவர்களும் உண்டு.  அதே சமயம் பெரும்பாலோனோர் திறமை மற்றும் அனுபவத்தினால் மாதம் 2 லட்சம் சம்பளம் பெறுகிறார்களாம்.

அங்கு பணிபுரிபவர்களில் சிலரின் குழந்தைகள் அமெரிக்காவில் படிக்கின்றனராம்.

பாதுகாவலர்களுக்கு :

அங்கு இஸட் பாதுகாப்பு என்பதால் அங்கு பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு மாதம் 15 லட்சம் சம்பளம் தருகிறார்.

கார் ஓட்டுனர் :

முகேஷம்பானி வீட்டில் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமில்லை. நிறைய அட்வான்ஸுடு தொழில் நுட்பங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லா கார் ட்ரைவர்களுக்கும் மாத சம்பளம் 2லட்சம். அவருக்கென ப்ரத்யோகமாக ஓட்டுபவருக்கு இன்னும் அதிகமாக சம்பளம் தரப்படுகிறதாம்.

லட்சம் லட்சமா கொட்டி இஞ்சினியரிங்க் எல்லாம் படிச்சு மாசம் 50 ஆயிரம் வாங்கறதுக்கே மூச்சு முட்டுது. இதுல சர்வ சாதரனமா அம்பானி வீட்ல வேலைசெய்றவங்க லட்சக் கணக்குல சம்பளம் வாங்கறத பார்த்தா காதுல புகைதான் வருது.

பொறந்துதா பொறந்தோம். முகேஷ் அம்பானி வீட்டின் வேலைக்காரங்களா பிறந்திருக்க கூடாதா?

SHARE