ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டனர் தினகரன் தரப்பு!

0
446

முன்னால் முதல்வர் ஜெயலலிதா உடல் நல குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் 5 ஆம் தேதி உடல் நிலை மோசமாகி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரின் இறப்பு குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளர்கள் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சையில் இருந்த வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருக்கும் ஜெயலலிதா கையில் ஜூஸ் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக்சிஜன் செலுத்துவற்கான கருவிகள் அவருடைய கழுத்தில் இருக்கிறது. அவருடைய கையில் பிபி பார்ப்பதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை ஆதாரம் இருப்பதாக சொல்லி வந்த தினகரன் தரப்பு விசாரணை ஆணையத்திடம் மட்டுமே வீடியோ வழங்கப்படும் என்று கூறி வந்த நிலையில் இன்று திடீரென வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஆர்.கே.நகர் இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஜெயலலிதாவின் வீடியோ வெளியாகி பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளது.