தோனி இத்தனை தொழில்களை நடத்தி வருகிறாரா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்!

0
509

ந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான, வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக ஜொலிக்கிறார் தோனி. களத்தில் இவரது லீடர்ஷிப்பை பார்த்து வியகாதவர்களே இல்லை. இந்திய அணியின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டால், அமைதியாக இருந்து, அதிரடியாக பேட்டிங் செய்து எதிரிகளை திணறடித்து வெற்றியை பறித்துக் கொடுப்பார். இவரது இந்த திறமைதான் பலமுறை இந்திய அணிக்கு வெற்றிக்கனிகளை பெற்றுத் தந்துள்ளது எனலாம்.

இந்தியா சிமெண்ட்ஸ்:
தோனி ஒரு விளையாட்டு வீரர் மட்டும் அல்ல. திறமையான தொழில் அதிபரும் கூட. 2013ம் ஆண்டு தேசிய விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’வின் இருந்து, ‘இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்தில் துணை தலைமை அதிகாரியாக இணைந்து பணியாற்றினார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒரு அணியான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியை சொந்தமாக வைத்திருக்கிறது என்பதால் தோனியே இந்த அணியின் கேப்டனாக இருந்தார்.

அமிதாப்புடன் கூட்டணி:
2014ம் ஆண்டு சென்னை FC என்ற கால்பந்து அணியை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் வாங்கும்போது, தோனியை அந்த அணியின் இணை உரிமையாளராக நியமித்தார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை:
அதிக பட்சம் ஊதியம் பெறும் முதல் 100 பிரபலங்களில் தோனியும் இடம்பெற்றார். ஆனால் அவர் விளையாட்டில் இருந்து பெற்ற ஊதியம் வெறும் நான்கு மில்லியன் டாலர்கள் மட்டுமே. இது ஒரு பகுதிநேர வருமானமாக மட்டுமே இருக்க முடியும். எனவே தோனி செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு அவர் செய்யும் தொழில்கள் மற்றும் நிர்வாகிக்கும் நிறுவனங்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

1
2
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்