டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

0
10066

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் கட்டணங்களை மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் அடுத்தாண்டு முதல் அமலுக்கும் வருகிறது.

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

பணமதிப்பிழப்பு:

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளதாக கூறப்பட்டு வந்தாலும், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பது சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு ரூ 1,8௦௦ கோடி வரை உயர வாய்ப்புள்ளது.

 

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

டிஜிட்டல்:

மத்திய அரசு விரும்பும் டிஜிட்டல் மயமாக்கலை ரிசர்வ் வங்கியும் வரவேற்றுள்ளதால், டிஜிட்டல் பரிவர்த்தனை முறைமைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் கட்டணங்களை மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் வரும் 2௦18ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

ரூ. 2௦ லட்சம் வரை:

ஆண்டு வர்த்தகம் இருபது லட்சம் ரூபாய் வரை மேற்கொள்ளும் சிறு வணிகர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ௦.4 சதவீதம் அல்லது அதிகபட்சமாக இருநூறு ரூபாய் வரை குறைக்கப்படும். ‘QR code’ மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணத்தை பெற ௦.3 சதவீதம் அல்லது அதிகபட்சமாக இருநூறு ரூபாயாகும்.

 

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

ரூ. 2௦ லட்சத்திற்கு மேல்:

இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வர்த்தகம் மேற்கொள்ளும் சிறு வணிகர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ௦.9 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்படும். ‘QR code’ மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணத்தை பெற ௦.8 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஆயிரம் ரூபாயாகும்.

 

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

வியாபாரிகள் ஹேப்பி:

கட்டணங்கள் குறையும் என்பதால் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை/சிறு வியாபாரிகள் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவே விரும்புவர். இதன்படி இரண்டாயிரம் ரூபாய் வரை ஒரு கடைக்காரர் டெபிட் கார்ட் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கான கட்டணம் ௦.75%ல் இருந்து ௦.4௦% ஆகவும் குறையும். ஆனால் இந்த கட்டணக் குறைப்பு நடவடிக்கை என்பது வங்கிகளுக்கு சில இடங்களில் நட்டங்களை ஏற்படுத்தலாம்.

#Connections

பிட்காயின் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 உண்மைகள்!

SHARE