சி.எஸ்.கே.வில் புதிதாக இணையும் டேவிட் வில்லியை பற்றிய சுவாரசிய தகவல்கள்!

0
4250

நடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் கேதார் ஜாதவ், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, இவருக்கு பதிலாக புதிய வீரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில் கேதார் ஜாதவிற்கு அடிப்பட்டதால், அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். பின் இறுதியாக வந்து சி.எஸ்.கே. வெற்றிக்காக வின்னிங் ஷாட் விளாசினார். தற்போது இவருக்கு காயம் குணமாகாததால் அணியை விட்டே விலகி இருக்கிறார்.

ஜாதவின் இடத்தை பூர்த்தி செய்வதற்காக இணைந்திருக்கும் அந்த புதிய வீரர் டேவிட் வில்லி. இங்கிலாந்துகாரர். இருபத்து எட்டு வயதுடைய டேவிட், 2015ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்திற்காக விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றாலும் இவர் ஏழாவது பேட்ஸ்மேனாக களம் இறங்குவார்.

டேவிட் வில்லிக்கு பந்துவீச்சு நன்றாக வரும். சென்னை அணியில் வேகப்பந்து வீசும் வீரர்கள் குறைவே என்பதால், வில்லியின் எண்ட்ரீ ஓரளவு ஆறுதல் தரலாம். இடது கையில் பந்து வீசும் இவர், கடைசி நேரத்தில் ஓவர் ஓடுவதில் வல்லவராம். எனவே இவருக்கு கடைசி 19 மற்றும் 20ம் ஓவர்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் வில்லி ஒரு சரியான ஆல்ரவுண்டர். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து க்ளப் போட்டிகளில், இவர் வெறும் முப்பத்து ஆறு பந்துகளில் எழுபத்து ஒன்பது ரன்களை எடுத்திருந்தார் என்பதால், சென்னை அணியின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாக இருப்பார் என்றும், ஜாதவின் இடத்தை நிச்சயமாக டேவிட் பூர்த்தி செய்வார் என்றும் அணி நிர்வாகம் கருதுகிறது.

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பாக்கப் போறீங்களா? இதை தெரிஞ்சிக்குங்க!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்