ஜாதவ் இஞ்சுரி… இங்கிலாந்து ஆல்ரவுண்டரை களமிறக்கும் சி.எஸ்.கே.!

0
162

சென்னை அணியை பொறுத்தவரை காயம், பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்ததால் ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. மிடில் ஆர்டரில் கலக்கும் கேதார் ஜாதவ் முதல் போட்டியிலேயே காயம் அடைந்தார். இவரும் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார். டுபிளிசிஸும் காயம் அடைந்திருக்கிறார்.

தனது அணியில் மூன்று வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்திருப்பதால், சரியான வீரரை தேர்ந்தெடுக்க தடுமாறியது சி.எஸ்.கே. நிர்வாகம். குறிப்பாக ஜாதவ் போட்டியின் நடுவே காயம் அடைந்து வெளியேறியதால் சென்னை வீரர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தனர். அந்த அளவிற்கு ஜாதவை நம்பினார்கள் என்றே சொல்லலாம். அவர் இல்லாதது அணிக்கு பின்னடைவுதான் என பயிற்சியாளர் டேவிட் ஹசி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை அணியில் ஜாதவின் இடத்திற்கு ஈடுகட்டும் விதமாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி நியமிக்கப்பட்டிருக்கிறார். டேவிட் வில்லிக்கு பந்துவீச்சு நன்றாக வரும். இடது கை பந்து வீச்சாளர். சென்னை அணியில் வேகப்பந்து வீசும் வீரர்கள் குறைவே என்பதால், வில்லியின் எண்ட்ரீ ஓரளவு ஆறுதல் தரலாம். குறிப்பாக டேவிட் வில்லி கடைசி நேரத்தில் ஓவர் ஓடுவதில் வல்லவராம். எனவே இவருக்கு கடைசி 19 மற்றும் 20ம் ஓவர்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட்டின் திறமை சென்னை அணியின் வெற்றிக்கு எப்படி வழிவகுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்