குளிக்கும்போது பார்த்ததாக ஆளுநர் பன்வரிலால் மீது இளம்பெண் புகார்!

0
5509

தாம் குளிப்பதை நேரில் பார்த்துவிட்டதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது கடலூர் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

கடலூர் சென்ற ஆளுநர் வண்டிப்பாளையத்தில் கழிவறைகளை ஆய்வு செய்தார். கீற்று மறைப்புக்குள் நுழைந்து அங்கு ஆய்வு ஆளுநர் ஆய்வு செய்ய முயன்றபோது, அங்கே குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் ஆளுநரை பார்த்ததும் அலறியிருக்கிறார். பின்னர் அப்பகுதி பெண்கள் ஆளுநருக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர் என்றும், இதையடுத்து ஆளுநர் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனே அங்கிருந்து ஆளுநரும் வெளியேறிவிட, தற்போது அந்த இளம்பெண் ஆளுநர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளதாகவும் சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஃப்ளேஷ்பேக் 2௦17: தமிழக அரசியலில் ஏற்பட்ட 16 முக்கிய நகர்வுகள்!