ஐ.பி.எல். பார்க்க புனேவுக்கு ரயில் ஏறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்!

0
773

“பார்த்தாயா எங்கள் ரத கஜ துரக பதாதிகளை” என்று ஹர்பஜனையே ட்வீட் போட வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செய்துள்ள காரியம்.

சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்த அரசியல் நெருக்கடி இருப்பதனால், புனேவில் போட்டிகள் நடந்து வருகின்றன. நாளை சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சி.எஸ்.கே. ரசிகர்களை புனேவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்காக ஒரு ரயில் முழுவதும் வாடகைக்கு எடுத்து, சென்னையில் இருந்து ரசிகர்களை அழைத்துச் செல்கிறது சென்னை அணி நிர்வாகம். ஒரு ரயில் முழுவதும் ரசிகர்களாகவே நிறைந்துள்ளனர். இந்த ரயிலுக்கு ‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’ என செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இதற்காக ஹர்பஜன் சிங், “பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை”. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா!! அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என மகிழ்ச்சியுடன் ட்வீட்டியுள்ளார்.

South News Tamil

வறோமுன்னு சொல்லு புனேக்கு ரயில் மூலம் படையெடுக்கும் ரசிகர்கள் ! #CSK #CSKfans #pune #Railway #CSKVSRR