ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் முதல் படமான “தடக்” படத்தின் அசத்தும் காஸ்ட்யூம்கள்!!

0
44

மயிலின் திடீர் மறைவு பெரும் அதிர்வை இந்தியா முழுவதும் ஏற்பட்டது. அவரின்
பட்டாம்பூச்சி கண்களாகட்டும், குழந்தை முகமாகட்டும், மிரள வைக்கும் நடிப்பாகட்டும்
அப்படியொருவரை மறுபடியும் சினிமா உலகத்தில் காண்பது கஷ்டம்தான்.

அவரின் மறைவுக்குப் பின் அவரது மகள் ஜான்வியின் முதல் படம் வெளிவருவதால்
மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.

சிகரமாக இருந்த ஸ்ரீ தேவியின் நடிப்பில் கொஞ்சமாவது காண்பிக்க வேண்டுமே என்ற
பதட்டம் ஜான்விக்கு இல்லாமல் இருக்காது. அதுதவிர  ஸ்ரீதேவி உயிருடன்
இருக்கும்போது எடுத்த படம். இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

ஜான்வியின் முதல் படமான தடக் காதல் கதையே. முதல் பார்வையில் பற்றிக் கொள்ளும் காதலும், அதன் பின் நடக்கும் பிரச்சனைகளே இந்த படம். பல தலைமுறைகளாகப் பார்த்த ஒரே மாதிரியான காதல் கதை என்றாலும், காதல் என்றும் அலுக்காது. எடுக்கும் விதம் மட்டு ஈர்க்க வேண்டும்.

இந்த படத்தை இயக்குபவர் சஷாங்க் கைதான். தர்மா மற்றும் ஜீ ஸ்டுடியோ இணைந்து
இந்த படத்தை தயாரிக்கிறரகள். ஹீரோ இஷான் கதார். (ஷாகித் கபூரின் தம்பி).

இந்த படத்தில் அவருடைய காஸ்ட்யூம் மிகவும் எளிமையாக இருப்பதான் அவர் நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக நடித்திருக்கலாம்.

பாடல்களில் அவரது காஸ்ட்யூம் மிக அழகாக இருக்கிறது. அலைபாயுதே வை
நினைவுபடுத்துகிறது.

படம் ரொம்பவே எதிர்ப்பார்க்கப்படுவதால் ஜான்வியின் வெற்றியை சற்று நிதானமாக பொறுத்திருந்து பார்க்கலாம்.

SHARE