காஃபி குடிக்கும் பெண்களே ஜாக்கிரதை… அது அபாயகரமானது!

0
289

காஃபி குடிக்க யாருக்குதான் பிடிக்காது. அதன் நிறமும் மணமும் எல்லாரையும் மயக்கும் குணமும் கொண்ட சுவை எல்லாரையும் கட்டிப்போட வைக்கும். நீங்கள் காஃபி குடிக்கலாம். ஆனால் அதற்கு வரைமுறை உள்ளதாம். விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாங்க அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கு ஆபத்து இருக்கிறதா?
ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் பெண்களுக்கு சுரக்கும். இதுவே பூப்படைவதற்கும், தாய்மையடைவதற்கு காரணம். இந்த ஈஸ்ட்ரோஜன் அளவுக்குஅதிகமாக சுரந்தால், எண்டோமெட்ரியோசிஸ் வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காஃபியில் காஃபின் என்கின்ற பொருள் உள்ளது. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதனை 4 மற்றும் 5 முறை குடிக்கும் பெண்களுக்கு என்டோமெட்ரியோஸிஸ் தாக்கும் அபாயம் உள்ளது என கூறுகின்றனர்.

எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
பொதுவாக கருப்பைக்கு உள்ளே வளரும் திசுக்கள், கருப்பைக்கு வெளியே வளர்ந்தால் அந்த நோய்க்கு எண்டோமெட்ரியோஸிஸ் என்று பெயர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்