புற்று நோயிலிருந்து மீண்டு வந்து சாதிக்கும் சூப்பர் செலிபிரட்டிகள் !!

  0
  13

  புற்று நோய் என்றாலே உலகில் அனைவருக்கும் முகத்தில் பீதியை உருவாக்கும்.
  உயிரை உருக்கும் அரக்கனின் பிடியிலிருந்து மீண்டு வருவதை வெறும்
  வார்த்தைகளாலும்., எழுத்துக்களாலும் சொல்லிவிட முடியாது. அதன் கோரப்பக்கத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும்.

  புற்று நோய் தாக்கியதும், பயத்தினாலேயே இறப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு மிக
  முக்கியமான சிகிச்சை மனோதைரியம்தான். தைரியமே பாதி சிகிச்சை தரும்.
  தன்னம்பிக்கை தளராமல் தொடர்ந்து போராடுபவர்கள், வாழ்க்கையிலும் சரி, நோயிலும் சரி வெற்றி காண்கிறார்கள்.

  அப்படி உங்களுக்கெல்லாம் தெரிந்த செலிபிரட்டிகள், புற்று நோயிலிருந்து மீண்டவர்கள் யாரெல்லாம் என பார்க்கலாமா..

  மனிஷா கொய்ராலா :

  உயிரே படத்தின் மூலம் எல்லார் மனதையும் கொள்ளை கொண்டவர் மனிஷா
  கொய்ராலா. 2012 ஆம் ஆண்டு அவர் மயக்கமடைந்து மருத்துவமனையில்
  அனுமத்திக்கப் போதுதன தெரிந்தது அவர் கருப்பை புற்று நோயினால் பாதிக்கப்பட்டது.
  அதன் பின் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து லண்டனுக்கு மேற்சிகிச்சைக்காக
  சென்றார். அங்கே இரு வருடங்கள் புற்று நோயுடன் போராடி பின்னர் மீண்டு வந்தார்.
  பல படங்களில் நடிக்கவும் செய்தார்.

  கௌதமி :

  கௌதமி 90 களில் புகழ் பெற்ற நடிகை.. மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு,
  முற்றிலும் குணமாகி தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். கமலுடன் லிவ் இன் வாழ்ந்து படங்களில் நடித்து, புற்று நோய் விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்பது என பிஸியாக உள்ளார்.

  மம்தா மோஹன் தாஸ் :

  மம்தா மோகந்தாஸ் தனது முதல் படத்தில் புற்று நோயாளியாகத்தான் வந்தர. பின்னர்
  2010 ஆம் ஆண்டு உண்மையிலேயே அவருக்கு புற்று நோய் தாக்கியது. ஹாட்கின்ஸ்
  லிம்போமா எனப்படும் புற்று நோய். உடலிலுள்ள நிண நீர்பகுதிகளில் உருவாகும் புற்று
  நோய். இந்த புற்று நோய் தாக்கிய அதே வருடத்தில் அவருக்கு சிறந்த நடிக்கைக்காக
  ஃப்லிம்ஃபேர் விருதும் கிடைத்தது. அவர் உடல் மனத்தில் திடம் பெற்று அந்த
  நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டு பின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

  யுவராஜ் சிங் :

  யுவராஜ் சிங் சில பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார் என்பது நம்மில் நிறைய பேருக்கு
  தெரிய வாய்ப்பில்லை. 2011 ஆம் ஆண்டில் யுவராஜ் சிங்கிற்கு மெடியோஸ்டினல்
  செமினோமா என்ற அரியவகை மரபணு புற்று நோய் இடது நுரையீரலில் வந்தது.பல
  கீமோதெரபி மற்றும் சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டு வந்து அவருடைய வெற்றிக்
  கோப்பையை மீண்டும் பெற்றுக் கொண்டார்.

  இன்னசன்ட் :

  மலையாளத்தில் புகழ்பெற்ற சிறந்த நடிகரான இன்னசன்ட் வரீத் 2012 ஆம் ஆண்டு
  தொண்டைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டார். அதன் பின் தொடர் சிகிச்சையினாலும், விடாத தன்னம்பிக்கையினாலும் புற்று நோயை வென்று, 2014 ஆம் ஆண்டு லோக் சபாவில் எம்பியாகவும் ஜெயித்தார். என்ன ஒரு தன்னப்பிக்கை!!

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்