நடிகர் விஜய் தனது பிறந்த நாளுக்கு ரசிகர்களுக்கு கொடுத்த செம ட்ரீட் என்ன தெரியுமா?

0
21

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயின் 62 ஆவது படம் வர இருக்கிறது. படத்தின் தலைப்பு சர்க்கார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான். இவர்கள் மூவரின் கூட்டணி ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக இருந்துள்ளது.

விஜய்க்கு இன்று 44வது பிறந்தநாள். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதால் தனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை என்று சொன்னார். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டார்.

முதல் போஸ்டர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர். தலைப்பு மட்டும் அல்ல ஃபர்ஸ்ட் லுக்கும் மாஸாக உள்ளது. அதில் அவர் சிகரெட் பிடிப்பது போலிருந்ததால், அதற்கு சமூக வலைதளங்களில் சற்று அதிருப்தியை வெளியிட்டனர்.

2வது போஸ்டர் :

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இன்னொரு போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் காரில் அமர்ந்து மடியில் லேப்டாப்பை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

மூன்றாவது போஸ்டர் :

மூன்றாவதாக ஒரு போஸ்டரும் வைரலாகியுள்ளது. விஜய் கெத்தாக நின்று கொண்டிருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த போஸ்டர்களை வைத்தே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அவருடைய பிறந்த நாளை கொண்டாடவில்லையென்றாலும் நிஜமான ட்ரீட் இந்த போஸ்டர்கள்தன என்று ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்

SHARE