ஆண்டாள் விவகாரம் வைரமுத்து மீது வழக்கு பதிவு!

0
222
ஆண்டாள் விவகாரம் வைரமுத்து மீது வழக்கு பதிவு!

சில தினங்களுக்கு முன் ஆண்டாள் குறித்த கருத்தருங்கம் நடைப்பெற்றது. கருத்தரங்கில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியனது.

வெளிநாட்டு ஆய்வாளர் வெளியிட்ட ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் மேடையில் வைரமுத்து கூறியதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். வைரமுத்துவுக்கு ஹெச்.ராஜா, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஸ்டாலின், சீமான், வைகோ, உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தன்னுடைய பேச்சுக்கு வைரமுத்து வருத்தமும் தெரிவித்தார்.

தற்போது இந்து முன்னணி சார்பாக வைரமுத்து மீது புகார் கொடுக்கப்பட்டது. விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர இந்து முன்னணி செயலாளர் சூரி என்பவர் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தெற்கு ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்