கனடா மருத்துவர்கள் செய்த இந்த செயலை இந்திய மருத்துவர்கள் செய்வார்களா?

0
1131

கனடா அரசு மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பளம் பெறுகிறோம். ஆகையால் ஊதிய உயர்வு வேண்டாம் அதை சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஊதிய உயர்வு வேண்டாம் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்” கனடா மருத்துவர்கள் கோரிக்கை..!

ஊதிய உயர்வு:
கனடாவில் கியூபெக் நகரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு, அரசு சமீபத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு அங்குள்ள 720 மருத்துவர்கள எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ கவுன்சிலிங் சங்கத்தில் மனு அளித்துள்ளனர். மருத்துவச் சங்கத்தின் தரப்பிலிருந்து மனுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

“ஊதிய உயர்வு வேண்டாம் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்” கனடா மருத்துவர்கள் கோரிக்கை..!

குறைவான செவிலியர்:
அதற்கு, மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். இங்கு செவிலியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதனால் ஊழியர்கள் பணிச்சுமை அதிகமாகி மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர். ஆகையால் கூடுதல் செவிலியர்கள் பணி அமர்த்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஊதிய உயர்வு வேண்டாம் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்” கனடா மருத்துவர்கள் கோரிக்கை..!

சிறப்பான திட்டத்திற்கு பயன்படுத்துங்கள்:
அதுமட்டுமில்லாமல் நாங்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பளம் பெறுகிறோம். இந்த ஊதிய உயர்வை சுகாதா மேம்பட்டுக்கு பயன்படுத்துங்கள் என்று தெரிவித்து மனு அளித்துள்ளனர்.  தங்களது ஊதிய உயர்வை நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு விட்டுக்கொடுத்த கனடா அரசு மருத்துவர்களைப் போல, இந்திய மருத்துவர்கள் விட்டுக்கொடுக்க எல்லாம் தேவையில்லை. எனினும் நம் ஏழை எளிய மக்களுக்கு தரமான, போதிய மருத்துவ வசதிகளை முதலில் வழங்கினாலே போதுமானது. இந்தியாவில் மருத்துவ வசதிகள் பெற முடியாத காரணத்தினால் மட்டுமே 20% பேர் பாதிக்கப்படுகின்றனர் அல்லது உயிரிழக்கின்றனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்