நாகப்பட்டினத்தில் கருப்பு மழை பெய்ததற்கு இதுதான் காரணமாம்!

0
52601

நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழையானது கருப்பு நிறத்தில் இருந்ததால் மக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் கருப்பு மழை பெய்ததற்கு இதுதான் காரணமாம்!

கருப்பு மழை பெய்ததால் கடல் சூறாவளி, சுனாமி அல்லது புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இதன் பின்னணி என்ன என்று வல்லுநர்கள் கூறும்போது, நீர்நிலைகளில் உள்ள நீரானது ஆவியாகி மேலே சென்று மழை மேகங்களாக மாறும்போது, பூமியில் இருக்கும் மாசுக்களும் நீர்த்துளிகளுடன் கலக்கின்றன.

மழை பெய்யும்போது அதன் மேகங்களில் உள்ள மாசுக்களும் மழையுடன் சேர்ந்தே பெய்கின்றன. இதுதான் மழை நீரானது வித்தியாசமானதாக அல்லது கருப்பு நிறமாக இருப்பதன் பின்னணி ஆகும்.

பல இடங்களில் மீன் மழை, தவளை மழை பெய்வதன் பின்னணியும் இதுதான். நீர்நிலையில் உள்ள மீன், தவளை போன்ற உயிரினங்களின் லார்வாக்கள் நீராவியுடன் மேலே சென்று மழை மேகமாக உருவாகிறது. அங்கே நீரில் இந்த லார்வாக்கள் வளர்ந்து மழையாக பெய்யும்போது பூமியின் மீது விழுகின்றன.

சீரியல் கில்லரா தஷ்வந்த்? குலை நடுங்க வைக்கும் 4 காரணங்கள்!