அய்யாகண்ணு கன்னத்தின் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி..!

0
345

திருச்சந்தூரில் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோக செய்த போது பா.ஜ.க. பெண் நிர்வாகி தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணத்தில் அறைந்து செருப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யாக்கண்ணு நடைபயணம்:
தென்னிந்திய நதிநீர் இணைப்பு குறித்து மற்றும் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் குறித்தும் 32 மாவட்டங்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு துண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார் அய்யாக்கண்ணு.

விவசாயி அய்யாகண்ணு கண்ணத்தில் அறைந்து செருப்பை காட்டிய பாஜக பெண் நிர்வாகி..!நடந்தது என்ன?
அப்போது தடுத்து நிறத்திய பா.ஜ.க. பெண் நிர்வாகி, அய்யாக்கண்ணு ஒரு ஃப்ராடு எனவும், இதை நம்பாதீர்கள் என்றும் தடுத்து நிறுத்தினார். கோவில் நோட்டீஸ் தரக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அய்யாகண்ணு கோபத்தில் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். கோபமடைந்த அந்த பெண் அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைத்துள்ளார்.

செருப்பை காட்டி:
அய்யாக்கண்ணுவுடன் இருந்த மற்ற விவசாயிகளும், வாக்குவாதத்தில் ஈடுபடுவே அந்த பெண் தனது செருப்பையும் கலட்டி கையில் எடுத்து காட்டியுள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதனம் செய்து, களைந்து போகச் செய்தனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி:
இச்சண்டை நடந்த இடத்தில் போலீசார் இல்லாத காரணத்தால், அங்கு சமரசம் ஏதும் உண்டாகவில்லை. அருகில் இருக்கக்கூடிய போலீஸ் நிலையத்திலும் கூட போலீசார் இல்லை என செய்தியாளர்கள் கூறினர். பிறகு அந்த பெண் விவசாயி தன்னை தாக்கியாதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்