சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த மற்றும் மோசமான உணவுகள்!!

0
10

சர்க்கரை நோய் சவ சாதரணமான நோயாக இன்று இந்தியாவில் உள்ளது. ஆனால் அந்த நோயை சாதாரனமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இத்ய நோய், பக்கவாதம், மூளியக் கோளாறுகள், ஞாபக மறதி, சிறு நீரகக் கோளாறுகள் இன்னும் பலப் பிரச்சனைகளுக்கு இந்த சர்க்கரை வியாதிதன காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம் உணவின் சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்கப்பட்டு தேவையான இன்சுலினை பெற்று உடலால்ஏற்றுக்கொள்ளப்படும்.தவறான உணவுப்பழக்கத்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உண்ணும் உணவுகளாலேயே உங்கள் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கலாம்.

சாப்பிட வேண்டியவை:

காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.

முருங்கைக் கீரை :

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.

 

பாகற்காய் :

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.

வெந்தயம் :

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

சாப்பிடக்கூடாதவை:

வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதையும் தவிர்த்தால் நல்லது.

சாப்பிடக்கூடாத பழங்கள் : பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட பழவகைகள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா., சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அருந்தக் கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

SHARE