ஹனிமூன் செல்வதற்கான சிறந்த தீவுகள் இந்தியால எங்கெல்லாம் இருக்கு?

0
12

கல்யாணத்திற்கு பின் முதன் முதலில் சேர்ந்து செல்லும் பயணம் இருவருக்குமே மறக்க முடியாத புது அனுபவமாக இருக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அப்படி நீங்கள் செல்லும் இடம் நிஜமாகவே நல்லதாக இருக்க வேண்டும். புது இடம், சில சமயம், மோசமான அனுபவங்களையும் தந்துவிடும். இணையத்தில் பார்த்த் ஐடத்திற்கும் நேரில் செல்லும் இடத்திற்கும்
நிறையவே வேறுபாடுகள் இருக்கலாம். ஆகவே முன்-திட்டமிடல் பயணத்தின் போது மிக முக்கியம்.

அடுத்து எப்பவும் எல்லாரும் போகின்ற ஊட்டி, கொடைக்கானல், வய நாட்ய், முன்னார் தானே வேற இடம் ஏதாவது கிடைக்குமா என்பவர்களுக்கு இந்த சவுத் இந்தியன் தள உதவுகிறது.

தீவுகள் எல்லாருக்குமே கனவு. ரம்மியமான மனதிற்கு இதமாக இடம். தனிமையான தீவுகள் உண்மையில் ஹனிமூனுக்கு ஏற்ற சிறந்த இடங்கள். ஆனால் இந்தியாவில் எங்கிருக்குன்னுதான் தெரியலையே என யோசிக்கிறீர்களா? இதோ கீழே சொல்லிருக்கோம் பாருங்க.

தியூ தீவு- குஜராத் :

போர்ச்சுக்கீசியரின் பண்பாட்டை பறைசாற்று அழகிய சிறு தீவு. இது மற்ற தீவுகளிய விட வித்தியாசமாக இருக்கும். கடல் அசைவ
உணவுகளுன்ம், அதன் தட்ப வெப்ப நிலையும் உங்களை அங்கேயே இருக்கச் சொல்லும். முக்கியமாக குஜராத்தில் இருப்பது போல்,
இங்கு மதுவிலக்கு இல்லை.

செல்வதற்கான தகுந்த காலம் : அக்டோபர்- ஜனவரி

திவார் தீவு- கோவா :

வழக்கமா எல்லாரும் போகும் கோவா இல்லாமல் பக்கத்துல இருக்கிற திவார் தீவுக்கு போயிட்டு வாங்க. யாரும் அதிகம் போகாத இடம்.
கூட்ட நெரிசல் இல்லாத மிக அமைதியான இடம்.

செல்ல தகுத்த காலம் – நவம்பர்-ஃபிப்ரவரி

செயின்ட் மேரிஸ் தீவு – கர் நாடகா :

நம்ம பக்கத்து மா நிலத்தலையும் இப்படி ஒரு அழகான தீவு இருக்குமான்னு நினைக்கிர அளவு வொர்த்தான் இடம் இது.முழுக்க்
பாறைகள் இருக்கும் கடற்கரை, நீல கடல் என பார்ப்பதற்கு கண்கள் கொள்ளைப் போகும்.

செல்லத் தகுந்த காலம் – எப்போது வேண்டுமானாலும்.

அந்தமான் :

அந்தமான் சென்றுவிட்டு வந்தால் இப்படி ஒரு இடமா என நீங்கள் வியப்பது உறுதி. அந்தமானுக்குள்ளும் சிறு சிறு தீவுகள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போட் பயனம், வாழ்க்கை துணையை ரசிப்பதா, இயற்கையை ரசிப்பதா என குழம்புவது
கியார்ண்டி.

லட்சதீபம் தீவு :

லட்சதீப தீவு ஹனிமூனுக்கான மிகச் சிறந்த தீவாக இருக்கும். மிகப்பெரிய தீவு கூட. மிக அற்புதமான இயற்கிய காட்சிகள், சிறு சிறு
குட்டித் தீவுகள் என இந்த ஹனிமூன் பயணம் உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.

செல்லத் தகுந்த காலம்- அக்டோபர்- மே

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்