வாரம் ஒருமுறை 10 நிமிடங்கள் சன் பாத் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

  0
  12

  அந்த காலத்தில் சூரிய நமஸ்காரம் என்று காலையில் எழுந்து ஆற்றில் குளித்து
  சூரியனை வெறும் கண்களால் பார்த்து நீரினால் பூஜை செய்து, விட்டு வீட்டுக்கு
  வருவரகள். இதனால் அன்று நாள் முழுதும் எனர்ஜியுடனும், தேக ஆரோக்கியத்துடனும் நேர்மறை எண்ண்ங்களுடனும் இருந்தார்கள் என்பது 100 சதவீத உண்மை.

  சூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை தீர்க்கிறது என்பதை அவர்கள்
  தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் இன்று சூரிய ஒளியல வரும் கெடுதல்களை மட்டுமே விளம்பரங்களில் காண்பிப்பதால் சூரியனைக் கண்டாலே மறைத்துக் கொள்கிறார்கள்.

  ஆனால் உண்மையில் காலையிலும் மாலையிலும் படும் இளம் வெயில் உங்களுக்கு
  எலும்புகள் பலப்படவும், உடல் பிரச்சனைகளை ரிப்பேர் செய்யவும் உதவுகிறது.
  அதனைப் பற்றி விரிவாக காண்போம்.

   

  எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வது நல்லது?

  தினமும் 10-15 நிமிடங்கள் காலை மற்றும் மாலை நேர வெயில் உடலுக்கும் மிகவும்
  நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.காலை 7மணி முதல் 9 மணி வரை சூரிய ஒளியை நாம் எடுத்து கொள்ளலாம் .

  அப்போது அதன் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அந்த நேரம் நாம்
  வெயிலை அனுபவிக்க சிறந்த நேரம். தினமும் முடியாவிட்டாலும் வாரம் ஒருமுறை சூரியக் குளியல் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தினமும் சில நிமிடங்கள் தினமும் நிற்கலாம்.

  நன்மைகள் :

  மகிழ்ச்சியை அளிக்கிறது:

  சூரிய ஒளி உடலில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்
  உடலில் அதிகம் சுரப்பதால் இயற்கையாகவே நாம் மகிழ்ச்சியோடும் ஆற்றலோடும்
  இருக்க முடிகிறது. சூரிய ஒளியின் வெளிப்பாட்டினால் மனச்சோர்வு குறைகிறது.

  அதிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற வெளியிடங்களில் உடற்பயிற்சி அல்லது
  நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எண்டோரபின் என்ற இரசாயனத்தை
  வெளியிடுகிறது. இது நாம் மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

  வைட்டமின் டி சத்து :

  குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வைட்டமின் டி தேவை பெரும்பாலும் சூரிய
  ஒளியால் மட்டுமே கிடைக்கிறது. வைட்டமின் டி யை சூரிய ஒளி வைட்டமின் என்று
  அழைப்பர். சூரிய ஒளி உடலை வைட்டமின் டி தயாரிக்க தூண்டுகிறது.

  குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகள் பலமடைய இந்த வைட்டமின் உதவி புரிகிறது. வைட்டமின் டி இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.

  immune defense

  நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது:

  சூரிய ஒளியில் உடலில் T செல்கள் உருவாவதை அதிகரிக்கிறது. T செல்கள் என்பது
  வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகையாகும். இவை உடலில் இருக்கும் தீங்கு
  விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிகின்றன.

  டயாபடிஸை தடுக்கிறது :

  சூரிய ஒளியும் அது  தரும்  வைட்டமின் டியும் நீரிழிவு நோய்
  தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய ஒளியின் மூலம் இரத்த சர்க்கரை
  அளவையும் கட்டுப்படுத்தலாம் என்பது தெரியுமா?

  மல்டிபிள் சிலிரோசிஸ் நோயை தடுக்கிறது:

  இந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் உடல்
  நடுக்கம் அல்லது பக்கவாதம் ஏற்படலாம். சூரிய ஒளி நம்மேல் படுவதின்
  மூலம் இந்த நோயின் அபாயம் குறைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள்
  கூறுகின்றனர்.

  சருமத்தை பாதுகாக்கிறது:

  சோரியாசிஸ் ,பூஞ்சைத் தொற்று, கட்டிகள் போன்றவற்றில் இருந்து சூரிய
  ஒளி நமது  சருமத்தை பாதுகாக்கிறது. ஆயுர்வேத சூரிய குளியலில், பாதிப்பு
  ஏற்பட்டவரின் உடலில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் படுமாறு நிற்க செய்வார்கள். சூரியன்ஒளியினால் உடலில் பாதிக்கபட்ட பாகம் சூடானதும், மறுபடி நிழலுக்கு வந்து அந்த இடங்களில்  தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வரகள்.  இந்த சிகிச்சையை
  தொடர்ந்து காலை வெயிலில் செய்வதால் நல்ல பலன் ஏற்படுகிறது என்று
  தெரிவிக்கின்றனர்.

  கருவுற்றல் அதிகரிக்கும்:

  சூரிய ஓளியால் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் வெயில் காலங்களில் அதிகமாக சுரக்கிறது. வெயில் காலங்கள் மற்ற காலங்களை விட கருவுருவதற்கு சிறந்த காலம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்