அடடே… நிர்வாணமாக தூங்குவதால் இவ்வளவு நன்மையா…!

  0
  2258

  டல் நலத்தையும் உடலையும் இணைக்கும் ஒரு தங்கச்சங்கிலிதான் உறக்கம். நாம் அன்றாட செயல்பாடுகளை திறம்பட செய்து முடித்துவிட்டு இரவு நேரத்தில் எட்டு மணி நேரம் உறக்கத்திற்காக செலவிட்டே ஆகவேண்டும். அனால் நம்மில் 90% பேர் குறிப்பிட்டபடி அமைதியான இரவு உறக்கத்தை எடுத்துக்கொள்வதில்லை. வாட்ஸப் குரூப்பில் நண்பர்களின் உரையாடல்களையும், ஃபேஸ்புக் நோட்டிஃபிக்கேஷன்களையும் எண்ணிவிட்டு தான் உறங்குகிறோம். இப்படியாக தூங்கும்போதும் கூட சிலர் அசவுகரியத்தால் நெளிந்து நெளிந்து, புரண்டு புரண்டு மெத்தையை வதம் செய்துகொண்டிருபார்கள். மெத்தை சரியில்லை என்பார்கள். உண்மையில் அவர்களது அசவுகரியத்திற்கு காரணம் அவர்கள் அணிந்திருக்கும் உடை தான். எந்த மனிதன் ஆடைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தூங்குகிறானோ, அவனே நிம்மதியான தூக்கப்பேறு அடைவான். கதவைத்திற காற்று வரட்டுமடா குழந்தாய் என ரஞ்சிதானந்த சுவாமிகளே சொல்லியிருக்கிறார். சுவாமிகள் சொல்லுவது முற்றிலுமான உண்மையே என்பதை இந்த உலகினுக்கு உணர்த்த எழுதப்பட்டதுதான் இந்த கட்டுரை. படித்துப் பயனடையுங்கள் மக்களே…

  உடல் சூடு குறையும்:
  நீங்கள் ஒட்டுத் துணியின்றி படுத்துத் தூங்குவதால், இதுவரை உணராத ஒரு சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்கள் உடலுறுப்புகள் வெளிக்காற்றை நன்கு அனுபவித்து, ரிலாக்ஸ் அடைந்து கூலாக செயல்படும். உடலில் சூடு குறைவதால், மிதமான தட்பவெப்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள்.

  நிம்மதியான உறக்கம்:
  உடலானது சுதந்திரத்தையும், குளிர்ச்சியையும் உணர்வதால், நிம்மதியான உறக்கத்தை அனுபவிப்பீர்கள். பகலில் பட்ட கஷ்டங்களெல்லாம் இரவு படுக்கையில் காணாமல் போய்விடும். தலையில் இருக்கும் பாரங்கள், டென்ஷன் எல்லாம் பறந்தோடிவிடும்.

  தாம்பத்தியம் மேம்படும்:
  ஆடைகளின்றி படுத்து உறங்குவது என்பது கணவன் மனைவி உறவை மேம்படுத்தும். ஆணின் தோல் பெண்ணுடைய தோல் மீது இறுக்கமாக தொடும்போது, இவருடைய உடலில் உள்ள ஆக்ஸிடோசின் என்ற பொருள் தோல் வழியாக வெளியேறிவிடும். இது வெளியேறினால் தாம்பத்ய வாழ்க்கையின் அஸ்திவாரம் மிகவும் வலிமையாக போடுவதற்கு வழி பிறக்கும்.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்