“ஓம்” என்று தினமும் சொன்னால் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

0
16

ஓம் என்பது மந்திரச் சொல். பல வெளி நாடுகளில் இந்த ஓம் என்ற ஓங்காரத்தைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளது. சூரியனின் சபத்ம் கூட ஓம் என்றே கேட்கின்றது என விண்வெளி ஆய்வில் கூறுயிருக்கின்றனர்.

அத்தகைய ஓம் என்ற மந்திரச் சொல், அ, உ,ம் என்ற எழுத்துக்களை உள்ளடக்கியது. இதனைச் சொல்வதால் பலவித அற்புதங்கள் உங்கள் உடலில் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கும். எப்படி எனப் பார்க்கலாமா?

ஏழு சக்கரம் தூண்டுதல் :

ஓம் மந்திரத்தை அதிகமாக உச்சரித்தால் உடலின் ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு, அது பெரிய மாற்றத்தை உண்டாக்கும். கவனம் சிதறாது. மன அழுத்தம் வரவே வராது.

நோய் தடுக்கும் :

ஓம் மந்திரத்தை திரும்ப, திரும்ப கூறி வந்தால் மூச்சின் வேகம் குறையும். இது நோய்கள் வருவதைத் தடுக்கும். நோய் இருந்தால் நீங்கும். மலட்டுத் தன்மையை விரட்டும் சக்தி ஓம் மந்திரத்துக்கு உண்டு.

காந்த சக்தி :

ஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால், அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் ஒருவித காந்தசக்தி போல பரவுவதை உணரலாம்.

விரும்பியது நடக்கும் :

வயிற்றிலிருக்கும் குழந்தை கூட ஓம் வடிவத்தில்தான் காணப்படும். நம் காதும் ஓம் போன்றுதான் இருக்கிறது. ஓம் மந்திரத்தை சொன்னால் விரும்பியது அனைத்தையும் பெறலாம் என்று கதோபநிடதம் கூறுகிறது.

ஆய்வு :

1993-muthal 1996 டெல்லஸ் என்பவர் ஓம் மந்திரத்தைக் கொண்டு உடலில் ஏற்படும் மாறுதல்களிய ஆராய்ச்சி செய்தார். இதில் 3 வருடங்களாக ஓம் சொல்லி தியானம் செய்தவர்களுடைய சுவாசம் சீராகவும், இதயத்துடிப்பும் குறைவாகவும் ஆகி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதைக் கண்டறிந்தார்.

இப்படி ஓம் சொல்வதால் நீங்களும் வியக்கத்தக்க முன்னேற்றங்களை வாழ்விலும், தேக ஆரோக்கியத்திலும் காணலாம். முயன்று பாருங்கள்

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்