சொட்டையிலும் முடி வளரச் செய்திடும் அபூர்வ மூலிகைகளைப் பற்றி குறிப்புகள்!!

0
9

சொட்டையில் முடி வளர்வது எளிதான காரியமல்ல. சிலருக்கு ஊட்டச்சத்து குறைவினால் உண்டாகலாம். இவர்களுக்கு எளிதில் சிகிச்சை பெறறுவிடலாம். சிலருக்கு மரபணு காரணமாக சொட்டை விழும் , இவர்களுக்கு அத்தனை முடி வளர்வது கஷ்டம்தான்.

இருப்பினும் இன்று கூந்தலுகென பல தெரபி மற்றும் அறுவை மற்றும் ஊசி மூலம்
சிகிச்சைகள் ஆரம்பித்திருக்கன. இவைகள் மிக சொற்ப அளவே பலன் தருகின்றன.நமது ஆயுர் மற்றும் சித்த மருந்துகள் பலவையும் மிகவும் சக்தி வாய்ந்தவை.

உள்ளங்கையிலும் முடி வளரச் செய்யும் சக்தி வாய்ந்த சூத்திரங்கள் கூட உண்டு.அவ்வகையில் சொட்டையிலும் முடி வளரச் செய்யும் ஆற்றல் மிக்க மூலிகைக் குறிப்புகளைப் பற்றிக் காண்போம்.

ஆலமர விழுது :

ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த
பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி
கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ்
செய்துவந்தால் முடிவளரும்.

யானை தந்தம் :

யானைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.யானைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டி சொட்டை உள்ள இடத்தில் தடவிக் கொண்டு வந்தால் முடி வளரும்.

அதிமதுரம் :

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும்.
இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி
முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும்.

ஊமத்தை :

ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத்
தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது.

எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை
நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த
வேண்டாம்.

SHARE