மோடி என்று குறிப்பிட்டதால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டுளது..!

0
208
மோடி என்று குறிப்பிட்டதால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டுளது..!

பிரதமரை மரியாதையாக குறிப்பிடாத காரணத்தினால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரை அவமரியாதை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 தேதி மேற்கு வங்காளம் நடியாவில் உள்ள ராணுவ தலைமையகம் உள்ளது. அங்கு ஜவான்களுக்கான தினசரி பயிற்சியான ஜீரோ பரேடு நடந்துள்ளது. பரேடின் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார் “மோடி நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

சஞ்சீவ் குமாரின் இந்த பேச்சு பிரதமரை அவமரியாதை செய்வதாக உள்ளதாக பட்டாலியன் உயர் அதிகாரி கருதி, இதனால் சஞ்சீவ் குமார் நன்னடத்தை மீறி செயல்பட்டதாக பிரிவு 40ன் கீழ் சட்டத்தின் படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரின் சம்பளத்திலிருந்து 7 நாள் ஊதியத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மற்ற ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்