நீதிமன்றத்தையே அதிரவைத்த ஆ.ராசாவின் வாதம் இதுதான்!

0
21284

ஆ.ராசா தனது இறுதிவாதத்தில் தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை அதிரவைத்தார். அதுமட்டுமில்லாமல் நீதிபதியையும் சிரிக்க வைத்தார் ஆ.ராசா. நம்பிக்கையாக தனது இறுதி வாதத்தை நீதிபதியிடம் கூறியிருந்தார். சிபிஐ இறுதி வாதம் நடந்த போது சிபிஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை ஆ.ராசா தனது பேச்சு திறமையால் தன்பக்க நியாயத்தை எடுத்துரைத்தார். அதில்,

நீதிமன்றத்தையே அதிரவைத்த ஆ.ராசாவின் வாதம் இதுதான்!

  • அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்தபிறகுதான் அதை ஒதிக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை மறைத்து சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகிறார்.
  • சிபிஐ வழக்கறிஞரின் வாதம் சட்டத்தை வளைத்து குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டம் என்ற நோக்கத்தில் மட்டுமே உள்ளது. ஆவணங்களின் அடிப்படையிலான சட்டப்படியாகவோ அவரின் வாதம் இல்லை
  • நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களில் உள்ள விவரங்களை மறைத்து தவறான தகவலைத் தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த சிபிஐ வழக்கறிஞர் முயற்சி செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

ஆ.ராசாவின் இந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் கோபமான சிபிஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் எனக்கே சட்டம் சொல்லித் தருகிறீர்களா? நான் ஒரு நேர்மையான வழக்கறிஞர் என்றார். அதற்கு உடனே பதிலளித்த ராசா, நீங்கள் பெரிய நீதிமன்றங்களில் வாதிடும் மூத்த வழக்கறிஞராக இருக்கலாம். அதற்காக எனக்கெதிராக நீங்கள் எடுத்துரைக்கும் பொய்யான தகவல்களை என்னால் சரி என்று அமைதியாக என்னால் இருக்க முடியாது. எனக்கும் சட்டம் தெரியும், நானும் விசாரணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர் தொழில் செய்தவன் தான் என்று கூறினார். ராசாவின் இந்த அதிரடியில் மேலும் அத்திரமடைந்த ஆனந்த் குரோவர் எனக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றார். ராசா பதில் சொல்வதற்குள் குறிக்கிட்ட நீதிபதி ஷைனி இருவரையும் சமாதனம் செய்தார்.