தமிழகத்தை தாக்க காத்துக் கொண்டிருக்கும் அடுத்த ஆபத்து!

0
6237

சில நாட்களுக்கு முன்பு தான் ஓகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் இதில் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மரங்கள் பலத்த காற்றினால் வேருடன் சாய்ந்து சாலைகள் பல துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தை தாக்க காத்துக் கொண்டிருக்கும் அடுத்த ஆபத்து!

ஓகி புயல் தமிழகத்தை அடுத்து கேரளாவை நோக்கி சென்று, தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. அதில் இருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆந்திரா நோக்கி நகர்கிறது. இதனால் இன்னும் மூன்று நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும். காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதனால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

டிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்!