100 வயசு வரை நோயே இல்லாம வாழனுமா? தினமும் இந்த காயகல்பத்தை செஞ்சு சாப்பிடுங்க!!

0
20

என்ன அப்படியே இருக்கறீங்க? ஏதாவது காயகல்பம் சப்பிடறீங்களா? என யாராவது
வயதான பின்னும் இளமையாக இருப்பவர்களைப் பார்த்து கேட்பதை
கேள்விப்பட்டிருப்பீர்கள். காயகல்பம் அத்தனை சக்தி வாய்ந்தது. புற்று நோய், சிறுநீரக
நோய்கள், இதய நோய்கள் வராது. பாதிக்கப்பட்ட உறுப்புகள் குணமாகும்.
காயகல்பம் சித்தர்கள் கண்டுபிடித்த அருமையான அருமருந்து.

மிகவும் ஆற்றல் வாய்ந்த மூலிகைகளாள் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை சாப்பிட்டுதன சித்தர்கள் எந்த நோயும் அற்று வாழ்ந்தார்கள்.

மிக அரிய மூலிகைகளால் செய்யப்பட்டும் மூலிகை விலை அதிகம். ஆனால் குறைந்த
செலவில் காயகல்பம் செய்யலாம். மனதிர்களின் நலத்திற்காக வள்ளலார் கொடுத்தருளிய குறிப்பு இங்கே சொல்லப்பட்டுள்ளது.

தேவையானவை :

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்

 

குடிக்கும் முறை :

மேலே சொன்னவற்றை நாட்டு மருந்துக்கடையில் பொடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.
சீரகத்தை மட்டும் வீட்டில் பொடி செய்து கொள்ளலாம்

பின் இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில்
ஒரு தம்ளர் பாலில் இந்த மூலிகைப் பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து
நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் சர்க்கரை கலந்து கொள்ளுங்கள்.  லேசான சூட்டிற்கு ஆறிய பிறகு சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் குடியுங்கள்.

நோய்கள் விலகும் :

இதனை சாப்பிட ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் தங்கியிருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும். உணவு முழுமையாக ஜீரணித்து இரைப்பையில் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

எப்போது குடிக்கலாம் ?

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.பத்தியம் எதுவும் தேவையில்லை. காலையில் குடிக்கத்தகுந்த அருமையான மூலிகைபானம் இது.

இந்த காயகல்பம் சகல நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதனை வருடக்
கணக்காக சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது என்பது உறுதி

SHARE