லண்டன் அருங்காட்சியகத்தில் முதல் முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலை..!

0
2830

உலக புகழ்ப்பெற்ற மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது. இங்கு முதன்முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலையை வைக்கின்றனர். லண்டன் அருங்காட்சியகத்தில் முதல் முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலை..!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சத்தியராஜ். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக  நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர். முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு விடையாக பாகுபலி 2 வது பாகம் இருந்தது. இரண்டு பாகத்திலும் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முழுக்க முழுக்க கிரப்பிக்ஸ் கலந்த மிகவும் பிரமாண்டமாக உருவன பாகுபலி படம் தமிழ் தெலுங்கு கன்னட ஹிந்தி என பல்வேறு மொழியில் வெளியாகி உலக கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது லண்டன் மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் கட்டப்பா சத்தியராஜின் சிலையை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் நடிகரின் மெழுகுசிலை முதன் முதலாக இந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்படவுள்ளது. இது தமிழ் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்