டிசம்பர் 31 தான் கடைசி தேதி… இதை எல்லாம் கட்டாயமாக செய்தாக வேண்டும்!

0
39720

இந்தியா முழுவதும் ஆதார் காட்டாயமாகி உள்ள நிலையில் தற்போது 31 டிசம்பர் 2017 இறுதிக்குள் தங்களது ஆதார் எண்ணை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனத்தில் இணைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பட்சத்தில் அதன் சலுகைள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் இணைப்புகளுக்கான பல்வேறு செயல்பாடுகளின் டெட்லைன் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் 'கட்'!

1. பான் கார்ட்: வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு பான்கார்ட் முக்கமாக உள்ள நிலையில், ஆதார் எண்ணை பான்கார்ட் உடன் இம்மாத இறுதிக்குள் இணைக்க காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2. வங்கி கணக்கு: இந்தியா முழுவதும் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளன. இதில் அவர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும்.

3. அரசு உதவி தொகை: அரசு வழங்கும் உதவி தொகை மற்ற அரசு தரும் சலுகைகள் போன்றவற்றிக்கு பெற கட்டாயம் ஆதார் எண் அவசியம் தெரிவித்த நிலையில் இம்மாத இறுதிக்குள் அதனை இணைக்க கட்டயமாக்கப்பட்டள்ளது.

4. அரசு எரிவாயு சிலிண்டர்: எரிவாயு சிலிண்டர் மூலம் கிடைக்கும் மானியம் தொடர்ந்து பெற எரிவாயு நிறுவனத்தில் தங்கள் ஆதார் எண்ணை உடனடியாக இம்மாத இறுதிக்குள் இணைத்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது.

5. போன் எண்: உங்கள் போன் எண்ணுடன் ஆதாரை அடுத்த வருடம் 6 பிப்ரவரி 2018-க்குள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

6. அஞ்சலக சேமிப்பு: நீங்கள் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் என்றால் இம்மாத இறுதிக்குள் உங்களது கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும்.

7. எல்.ஐ.சி. காப்பீடு: எல்.ஐ.சி. நிறுவனக் காப்பீடு திட்டத்தில் இருப்பவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் நீங்கள் அனுபவித்து வரும் திட்டங்களுடன் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும்.

8. சமூக பாதுகாப்பு திட்டங்கள்: ஓய்வூதிய திட்டம், அரசு ஸ்காலர்ஷிப் திட்டம், முதியோர் நலத் திட்டம் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளவர்கள் உங்களது ஆதார் எண்ணை டிசம்பர் 31க்குள் திட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்… மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

SHARE