ஒரு இந்துவின் உயிரைக் காப்பாற்ற தனது ரம்ஜான் நோன்பையே கைவிட்ட மனிதர் !

0
15

ஒருவருக்கு உதவி செய்யும் போது ஹிந்து, முஸ்லிம் என சக மனிதர்கள் யாரும் பாகுபாடு பார்ப்பதில்லை. பார்க்கவும் கூடாதுதான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. காரணம் இக்கட்டுரையில் கடைசி பாராவில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

மஜித் வீதிகளில் அம்மன் கோவில் இருக்கின்றன. இந்துக்களின் வீதிகளில் தர்கா இருக்கிறது. பண்டிகளைன்போது முஸ்லிம் தெருக்களிலும் அலங்கார விளக்குகள், பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. பிரச்சனைகள்,
கலவரங்கள் செய்பவர்கள் யாரென்று பார்த்தால் கண்டிப்பாக பொதுமக்கள் இல்லை. அவர்களை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் என
சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றது. அதிலொன்றுதான் இந்த விஷயமும்.

ரத்தம் தேவை

அஜய் பிஜலவான் என்பவர் மிகவும் சீரியஸான நிலைமையில் சிட்டி மருத்துவ மனையில் அனுமதி செய்யப்பட்டிருக்கிறார். ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே போயிருக்கிறது. அவருடைய கல்லீரலும் பாதிக்கப்ப்ட்டிருந்திருக்கிறது.

அவருக்கு உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டிய நிலைமை.அவருடைய உறவினர்கள் உடனே ரத்தம் தேவைப்படுவதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த தவலைப் ஆரிஃப் கான்
என்பவர் பார்த்துள்ளார்.

அவரும் அதே ரத்த வகை என்பதால் உடனே அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

மருத்துவர்கள் மறுப்பு :

ஒரு நொடியும் தாமதிக்காமல் அந்த மருத்துவமனைக்குச் சென்று தான் ரத்தம் தருவதாக கூறியுள்ளார். ரஞ்சான் சமயம் என்பதால், இவரின் நோன்பு அறிந்து, வெறும் வயிற்றில் ரத்தம் தரக் கூடாது.

ரத்தம் தருவதற்கு முன் சாப்பிட்டு வர வேண்டும் இல்லையென்றால் அவரின் ரத்தம் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள்.

மனித நேயம் :

” ஒரு உயிரை காப்பாற்ற நான் எனது நோன்பை கைவிட வேண்டுமென்றால் நிச்சயம் செய்கிறேன். மனித நேயம்தான் தனக்கு முதலில் வேண்டும் என சொல்லி எல்லாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ரம்ஜானின் முக்கிய கற்பித்தலே தேவையிருப்பவருக்கு உதவ வேண்டுமென்பதுதான்.

சாப்பிடாமல் நோன்பிருந்து, தேவைப்படுபவருக்கு உதவி செய்யாமிலிருந்தால்
அல்லா மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். ஏனென்றால் மனித உயிர் மிகவும் உன்னதமானது எனவும் சொல்லியிருக்கிறார். அதோடு ரத்தமும் அளித்து காப்பாற்றியிருக்கிறார்.

மிகவும் உணவுபூர்வமாக இருக்கிறதல்லவா. உண்மையில் பெரும்பாலான மக்களிடம் மதப் பாகுபாடுகளில்லை. ஏதோ சில நாசக்காரர்களால்தான் இந்தியாவில் பல பிரச்சனைகள்.சில துளி விஷத்தால் பால் முழுவதும் நஞ்சாவது போல்தான் இதுவும். நஞ்சை தள்ளி வைத்து பாகுபாடின்றி பழகுவதும்தான் இந்தியாவை ஒரு பிணப்புடன் வைத்திருக்கும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்