இந்த 9 உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது!

0
56945

ஃப்ரிட்ஜ் வந்ததும் வீட்டில் இருந்த எல்லா பத்திரங்களும் அதன் உள்ளே சென்றுவிட்டன. நேற்று மீந்த சாம்பார், பழைய சோறு, காலையில் வைத்த டீ-காஃபி என எல்லாமே லிஸ்ட்டில் அடங்கும். காய்கறிகள், பழங்கள் வைப்பதிலும் கூட நாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம். எலுமிச்சை, இஞ்சி போன்றவை ஃப்ரிட்ஜில் புஞ்சை பிடித்து விடுகிறது. எந்தெந்த உணவுகளை எல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை அடுத்தடுத்த காலரில் பாப்போம்.

இந்த 9 உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது!

சமையலில் உணவுகளுக்கு சுவையூட்ட வேண்டும் என்றால் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. தக்காளி இளவெப்ப நிலையில் இருந்தால்தான் நன்கு பழுத்து சுவை மிக்கதாக மாறும்.

இந்த 9 உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது!

புதினா மணம் மிக்க சமையல் பொருள் ஆகும். இதை ஃப்ரிட்ஜில் வைப்பதால் உள்ளிருக்கும் செயற்கை காற்றில் பட்டு மணம் குறைய வாய்ப்புண்டு.

இந்த 9 உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கை தடிமனான காகிதத்தில் சுற்றி வெயில் படாத இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் இதில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை சத்துக்கள் குறையும்.