7 வயது சிறுமியின் பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பி செலுத்தி சீனியர் மாணவிகள் செய்த ரெக்கிங் கொடுமை..!

0
1199

விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிகள் ரெக்கிங் செய்துள்ளனர். 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் பிறப்பிறுப்பில் இரும்பு செலுத்தி ரெக்கிங் கொடுமை செய்துள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ராஜி என்ற 7 வயது சிறுமி 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை இறந்துவிட்ட நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த ராஜியின் தாய் அவரை படிக்க வைத்து வருகிறார்.

விடுதி ஒன்றில் ராஜி தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளைப் பார்க்க வந்த தாய் ராஜி உடல்நலம் சரியில்லாமல் இருப்பதை பார்த்து பதறிப் போய் என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார்.

ராஜி தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் கூறியுள்ளார். அதே விடுதியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் சில மாணவிகள் சிறுமி என்றும் பாராமல் வேலை வாங்கியுள்ளனர்.

அடித்து துன்புறுத்தி வந்த சீனியர் மாணவிகள், ஒரு கட்டத்தில் அவரின் பிறப்புறுப்புக்குள் இரும்பு ராடரை செலுத்தி தாக்கியுள்ளனர்.இது குறித்து ராஜியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சட்ஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்