உங்கள் வீட்டில் உணவுகள் வீணாவதை தடுக்க உடனே இந்த 6 விஷயங்களை செய்யுங்க!

0
7366

இந்த உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருட்கள் வீணாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், உலக அளவில் 1.3 பில்லியன் டேன் உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் விளைநிலத்தில் இருந்து சந்தைக்கு வந்து நுகர்வோரிடம் சேர்வதற்கு முன்பாகவே அழுகி வீணாகிவிடுகின்றன. இந்தியாவில் மட்டும் 23௦ லட்சம் டன் உணவு தாணியங்கள், 12௦ லட்சம் டன் பழங்கள், 21௦ லட்சம் டன் காய்கறிகள் வழியிலேயே வீணாகின்றன. சந்தையில் இருந்து வீட்டிற்குள் வந்ததும் மூன்றில் ஒரு பங்கு உணவுகள் வீணாகின்றன. உணவு வீணாக்குவதை யாருமே தெரிந்து செய்வதில்லை என்றுதான் சொல்வீர்கள். நாளைக்கு சமைக்கலாம்னு இருந்தேனே… இப்படி வீணாகிடுச்சே’ என நொந்துகொள்வீர்கள். தக்காளி, தயிர், தேங்காய் போன்ற உணவுப்பொருட்கள் எல்லாம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கண்களில் கம்பி நீட்டிவிடும்.

சரி, இப்படி வீணாவதை தடுத்து நிறுத்திட நுட்பமே இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. அது உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுடைய மதி நுட்பத்தால் மட்டும்தான் உணவுகள் வீணாவதை தடுத்து நிறுத்திட முடியும். மிக மிக எளிமையாக அதை உங்காளால் செய்திட முடியும். எப்படி அதை செயல்படுத்துவது என அடுத்தடுத்த காலரில் படித்துப் பாருங்கள்.

உங்கள் வீட்டில் உணவுகள் வீணாவதை தடுக்க உடனே இந்த 6 விஷயங்களை செய்யுங்க!

வழி #1:
காய்கறி அல்லது உணவுப்பொருட்கள் வாங்க ஷாப்பிங் செல்வதற்கு முன்பு உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ்ஜில் என்னென்ன உணவுகள் இருக்கின்றன என்பதை ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்லுங்கள்.

உங்கள் வீட்டில் உணவுகள் வீணாவதை தடுக்க உடனே இந்த 6 விஷயங்களை செய்யுங்க!

வழி #2:
உங்களுக்கு எந்த பொருட்கள் தேவைப்படுகிறதோ அதை மட்டுமே வாங்குங்கள். சூப்பர் மார்க்கெட்களில் ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்’ என்று போடுவார்கள். அது உங்களது தேவைக்கு அதிகமானதகாவே இருக்கும்.