4694 ஆபாச இணையதளங்களுக்கு ‘தடா’ போட்டாச்சு!

0
151
4694 ஆபாச இணையதளங்களுக்கு 'தடா' போட்டாச்சு!

மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களில் உத்தரவின் பேரில் இயங்கி வந்த பல்வேறு ஆபாச வீடியோ இணைதளங்கள் முடக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசும் 4694 இணையதள பக்கங்களை முடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா, லோக்சபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் தொடர்பான வீடியோக்கள் பல இணையதளங்களில் உள்ளன. அப்படி வீடியோகள் உள்ள 4,694 இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின்படி, 2,133 இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE