ராமராஜிய ரத யாத்திரை ஏன் தமிழ்நாட்டில் எதிர்க்கப்படுகிறது? 4 நச் காரணங்கள்!

0
1427

மதநல்லிணக்கமும், பகுத்தறிவும் செறிந்த தமிழ்நாட்டில், ஜெயலலிதா இருந்தவரை இந்துத்துவத்தை ஆதரிக்கும் விதமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களோ அல்லது ராமராஜிய ரத யாத்திரையோ நடந்தது இல்லை. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க, அரசின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நடந்தது. இப்போது ராமராஜிய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த ரத யாத்திரையை கண்டித்தும், எதிர்த்தும் தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன. இதற்கான 4 காரனகளை இங்கே பார்ப்போம்.

1. தமிழ் மண்ணில் மதவாதத்தை புகுத்துவதற்காகவே இந்துத்துவா கொள்கையை பரப்பும் ஊர்வலங்கள், யாத்திரைகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது. உறுதியான திராவிடத் தலைவர்கள் இருந்த வரையிலும் மதவாத சக்திகள் இங்கே செயலிழந்து கிடந்தன. தமிழியம், திராவிடம் என்ற கொள்கைகளால் மட்டுமே ஒன்றுபட்டு வாழ்கிறோம். எதற்கு புதிதாக மதப்பிரிவினை?

2. ராமஜென்ம பூமி என கூறப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மக்களுடைய ஆதரவை சம்பாதிப்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம் ஆகும். ராமர் கோவில் பிரச்சினை எவ்வளவு பூதாகாரமானது, எவ்வளவு சிக்கலகளை உள்ளடக்கிய பிரச்சினை என மக்கள் அறிவார்கள். மதநல்லிணக்கத்தை குழித்தோண்டி புதைக்கும் இந்த விவகாரத்தை தீர்த்து வைக்க இங்கே ரதம் இயக்கப்படுவதை நம்மவர்கள் விரும்பவில்லை.